சுங்க இலாகா அதிகாரி ஒருவருக்கு 3 ஆயிரம் வெள்ளியை கையூட்டாக கொடுக்க முயன்றதாக ஆடவர் மீது நேற்று ஜொகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. நீதிமன்ற பதிவாளர் சபத்தோன் டாவுட் முன்னிலையில் அக்குற்றச்சாட்டை டி.கணேசன் (வயது 24) என் பவருக்கு எதிராக வாசிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு பத்து பகாட் ஜாலான் சோகாவில் நேப்பாளிய நாட்டவரைச் சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து சுங்க இலாகா அதிகாரி நூரூல் இசாத்தி முக மட்டிடம் அந்த கையூட்டுப் பணத்தை கையூட்டாக கொடுக்க முயன்றதாக டி.கணேசன் குற்றச் சாட்டை எதிர் நோக்குகிறார். 2009 மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையம் பிரிவு 17 (பி)யின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் டி.கணேசன் 20 ஆண்டு வரை சிறையை எதிர் கொள்ளவும் கையூட்டாக வழங்கப்படும் பணத்திற்கு ஐந்து மடங்காக 10 ஆயிரம் வெள்ளி அபராதமும் விதிக்க சட்டம் வகை செய்கின்றது. வழக்கை மீண்டும் மார்ச் மாதம் முதல் தேதி செவி மடுக்க நீதிமன்றம் தேதியை நிர்ணயித்தது. நேப்பாள நாட்டவருக்கு மொழி பெயர்ப்பாளரை நியமித்துக் கொள்ளும் வகையில் வழக்கு மீண்டும் மார்ச் முதல் நாள் செவிமடுக்கப்படும். இவ்வழக்கில் அரசாங்க தரப்பில் லஞ்ச ஒழிப்பு ஆணையம் சார்பில் நோர்ஷரினா ரய் சான் பிரதிநிதித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்