ஊழல் நடவடிக்கையில் ஈடுபடும் சமய அமைப்புகளின் பொறுப்பாளர்கள் யாரும் எங்களிடமிருந்து தப்பிக்க முடி யாது என்று எஸ்.பி.ஆர்.எம். எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எச்சரிக்கை விடுத்தது. அதில் ஊழல் நடந்தாலோ அல்லது அதிகார துஷ்பிரயோகம் நிகழ்ந்தாலோ யாரும் அதிலிருந்து தப்பிக்க முடி யாது. அது சமய அமைப்பு எனவும் நாங்கள் ஒருபோதும் அவர்களை விட்டுக் கொடுக்க மாட்டோம் எனவும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணைத் தலைமை ஆணையர் (நடவடிக்கை) டத்தோ அஸாம் பக்கி கூறினார். சம்பந்தப்பட்ட அந்த சமய அமைப்பில் வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள், பதவிகள் அதில் ஊழல் செய்வதற்கோ அல்லது அதிகார துஷ்பிரயோகம் செய்வதற்கோ அல்ல என்று அவர் சொன்னார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையிலிருந்து தப்பித்து விடலாம் என யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம். அண்மையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கையால் எந்தவொரு அமைப்பும் விசாரணையிலிருந்து விடுபட்டதில்லை என்பதை சுட்டிக் காட்டியுள்ளதாக அவர் சொன்னார். ஜொகூர் சமய இலாகாவில் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு அதி காரிகள் கைது செய்யப்பட்டது குறித்து கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விவகாரத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கடுமையாகக் கருதுகிறது. காரணம் அந்த நபர்கள் அனைவரும் சமூகத் தினரால் நன்கு மதிக்கப்படுபவர்கள். எனவே, அவர்கள் அனைவரும் நேர்மையாகவும், உயர்நெறிகளுடனும் சேவையாற்றியிருக்க வேண்டும் என்றார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்