போலீஸ் தடுப்புக் காவலில் மேலும் ஒருவர் மரணமடைந் ததை தொடர்ந்து, இதுபோன்ற சம்பவங்களை விசாரிப்பதற்கு போலீஸ் புகார், தவறான நடத்தை மீதிலான சுயேச்சை ஆணையம் ஒன்றை அமைக்க வேண் டும் என்று மலேசிய வழக்கறிஞர் மன்றம் வலியுறுத்தியுள்ளது. இந்த ஆணையத்தை அமைப்பதே மிகவும் முக்கியமான முதல் நடவடிக்கையாகும். இதன் வழி மட்டுமே, குற்றம் புரியும் முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என்று அம்மன்றத்தின் தலைவர் ஸ்டீவன் திரு கூறினார். போலீஸ் தடுப்புக் காவலில் மரணமடையும் கைதிகளில் பாலமுருகனின் சம்பவமே கடைசியாக இருக்கட்டும். இப்போதே அந்த சுயேச்சை ஆணையத்தை உருவாக்குங்கள் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். பாலமுருகன் மீது கோலாலம்பூர் மருத்துவமனை மேற்கொண்ட இரண்டாவது பிரேதப் பரிசோதனை, அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் என்றும் அதனால் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும் காட்டுகிறது. இது அதிர்ச்சித் தரும் வகையில் உள்ளது. பிப்ரவரி 7-ஆம் தேதி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பாலமுருகன் ஆஜர்படுத்தப்படும்போது பலவீனமாகக் காணப்பட்டார். அவரால் நடக்க முடியவில்லை. முகத்தில் காயங்கள் இருந்தன. மூக்கிலும், வாயிலும் ரத்தம் வடிந்தது. அவர் ரத்த வாந்தியும் எடுத்துள்ளார். போலீசார் பாலமுருகனை தாக்கியதாக பாலமுருகனின் வழக்கறிஞர் கூறினார். அவரின் நிலைமையை பார்த்து, விசாரணை அதிகாரியை மாஜிஸ்திரேட் விசாரித்த போது அந்த அதிகாரி மௌனம் சாதித்துள்ளார். பாலமுருகனை தடுத்து வைக்கும் மனுவை மாஜிஸ்திரேட் நிராகரித்து, உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல உத்தரவிட்டார். எனினும், பாலமுருகனுக்கு மருத்துவ கவனிப்பு தரப்படவில்லை. போலீசார் இதுபோன்று நடந்து கொள்வது சட்டத்திற்கு புறம்பானது என்று ஸ்டீவன் திரு சுட்டிக்காட்டினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்