கம்போங் கடாசானில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் வெ.90 ஆயிரம் மதிப்பிலான 10,140 பெட்டி சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குனாக் மாவட்ட போலீஸ் படையின் சிறப்புக் குழுவினர் இச்சோதனையை மேற்கொண்டனர். இதில் 25 வயதுடைய உள்நாட்டவரும் 67 வயதுடைய பிலிப்பைன்ஸ் பிரஜையும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப் பட்ட வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களிலிருந்து இந்த சிகரெட் பெட்டிகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. வரிப்பணம் கட்டாத 4,940 சூர்யா ரக சிகரெட் பெட்டிகள், 4,600 பிரிமியம் ரக சிகரெட் பெட்டிகள், 600 எல்ஏ ரக சிகரெட் பெட்டிகள் போன்றவை கைப்பற்றப்பட்டதாக குனாக் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் நசாருடின் எம் நாசிர் தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் பெட்டிகளும் இரு வாகனங்களும் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப் பட்டன. கைது செய்யப்பட்ட இருவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்