மலாக்காவிலுள்ள உள்நாட்டு பல்கலைக்கழகமொன்றில் பயிலும் மாணவரின் சடலம் தெலுக் செங்காடி யிலுள்ள செம்பனைத் தோட்டத்தில் கண்டுபிடிக் கப்பட்ட விவகாரம் இங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் செம்பனைத் தோட்டத் தொழிலாளர் பல்கலைக்கழக மாண வரான முகமட் அஸிம் நஸ்ரி சம்சுடினின் (வயது 21) சடலத்தைக் கண்டுள்ளனர். சம்பவம் நிகழ்ந்த தினத்தன்று, காலை 11 மணியளவில் சம்பந்தப்பட்ட நபர் சக நண்பரின் மோட்டார் சைக்கிளில் தோட்டத்தை சுற்றி பார்ப்பதற்காக சென்றுள்ளார்.தெலுக் செங்காட் பட்டணத்திற்குச் செல்லும் சாலையிலிருந்து 300 மீட்டர் தூரத்தில் சடலம் மீட்கப்பட்டதாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் படைத் தலைவர் ரஹ்மாட் ஒத்மான் தெரிவித்தார். சம்பவம் நிகழ்ந்த இடத்திற்குச் சென்று பார்க்கையில் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் நபர் தரையில் கிடந்தார். அவர் நீல நிற சட்டையும் நீல நிற ஜீன்சும் அணிந்திருந்தார். ஆனால் அங்கு எந்தவித அடையாள ஆவணங்கள் கிடைக்கவில்லை. அந்நபரின் முதுகு பகுதியில் 3 செண்டி மீட்டர் அகலம் கொண்ட கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்ட காயம் இருந்தது விசாரணையில் தெரிய வந் தது. சடலம் இருந்த இடத்திலிருந்து 23 மீட்டர் தூரத்தில் 36 செண்டி மீட்டர் நீளம் கொண்ட கத்தியை போலீசார் மீட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட நபர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் போலீசார் சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து மீட்டனர்.இவர் ரவாங் தாசேக் புத்ரியைச் சேர்ந்தவர் ஆவார். இந்தச் சம்பவம் தொடர்பில் அவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாக ரஹ்மாட் ஒத்மான் தெரிவித்தார். இந்த மாணவர் தன்னுடைய மேற்கல்விக்கான நடைமுறை பயிற்சியை இந்த தோட்டத்தில் மேற்கொண்டு வந்துள்ளார். இவரின் இந்த பயிற்சி காலம் வரும் மார்ச் மாதம் 6ஆம் தேதி முடிவடைய இருந்தது.இந்த சம்பவத் திற்கான நோக்கமும் காரணமும் இன்னும் தெரிய வரவில்லை. இதன் தொடர்பில் துரித விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்