வடகொரியத் தலைவர் கிம் ஜோங் - உன்னின் ஒன்றுவிட்ட மூத்த சகோதரர் கிம் ஜோங் - நாமின் மரணப் புலனாய்வில் மலேசியா தென் கொரியாவுடன் கூட்டுச் சதி செய்கிறது எனும் வடகொரியாவின் குறை கூறல்களை தென் கொரியா மறுத்துள்ளது. அந்த மரண விசாரணையில் அந்நிய சக்திகளுடன் சேர்ந்து மலே சியா செயல்படுகிறது என மலேசியாவுக்கான வட கொரியத் தூதர் காங் சோல் கடந்த திங்களன்று கூறினார். காங்கின் குறைகூறல் பகுத் தறிவுக்கு ஒவ்வாத போலி வாதம் அது பதிலுரைப்பதற்கு ஏற்புடையதல்ல என தென் கொரிய அதிகாரி கூறியதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.ஜோங் நாமின் மரணம் தொடர் பில் வடகொரியாவுக்கும் மலே சியாவுக்குமிடையே அரச தந்திர மோதல் அதிகரித்து வருகிறது. காங்கின் குறை கூறல் அடிப்படையற்றது என வர்ணித்து விஸ்மா புத்ரா கடந்த திங்களன்று அறிக்கை வெளி யிட்டுள்ளது. மலேசியாவின் நன் மதிப்பை களங்கப்படுத்தும் வகையிலான ஆதாரமற்ற ஏதேனும் குறை கூறல் முயற்சிகளை மலேசிய அரசாங்கம் மிகவும் கடுமையாகக் கருதுகிறது என அந்த அறிக்கை யில் குறிப் பிடப்பட்டுள்ளது. ஜோங்-நாமின் சவப்பரி சோதனையின்போது பியோங் யாங் அதிகாரிகள் உடனில்லை. அதனால் அப்பரி சோதனை முடிவை வடகொரியா ஏற்காது என்றும் காங் கடந்த வாரம் கூறினார். அவ்வுடலை மலே சியா உட னடியாக ஒப்படைக்க வேண்டும் என காங் சோல் கோரினார். ஜோங் நாமின் உட லைக் கோர அவரின் குடும்பத் தாருக்கு இரு வார கால அவ காசம் வழங்கப்படும் என மலேசிய போலீஸ் கூறியது. தன் தந்தையின் உடலை அடையாளம் காணும் வகையில் ஜோங் நாமின் மகன் கிம் ஹான் - சோன் மலே சியாவுக்கு வருவதாக வதந்தி நிலவியது.எனினும் கேஎல்ஐஏ 2க்கு விரைந்த ஊடகப் பணியாளர்கள் அப்படியான அறிகுறி எதையும் காணவில்லை எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்