உணவகங்களில் வாழை இலைச் சாப்பாட்டின் விலை உயர்வு காணும் நிலை ஏற்படலாம் என்று பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உண வக உரிமையாளர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர் டத்தோ ரெனா இராமலிங்கம் நேற்று கூறினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வாழை இலையின் விலை 15 முதல் 20 காசுகள்தான். ஆனால், இன்றைக்கு அதன் விலை 30 காசுகளில் இருந்து 50 காசுகள் வரை விற்கப்படுகிறது. அடுத்த மாதத்தி லிருந்து வாழை இலைச் சாப்பாட்டு விலை அதிகரிக்கவிருக்கிறது. காய்கறிகள், கோழி, இறைச்சி ஆகியவற்றின் விலைகள் அதிகரித்து விட்டதன் விளைவாக இலைச் சாப்பாட்டு விலையும் அதிகரிக்கவுள்ளது. எனினும், விலை அதிகரிப்புச் செய்யவேண்டாம் என்று தனது உறுப்பினர்களுக்கு பிரிமாஸ் கூட்டத்தின் போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில இழப்புகள் இருக்கும் பட்சத்தில் அதனை ஏற்றுக்கொண்டு விலை அதிகரிப்பைத் தவிர்க்கும்படி உறுப்பினர்களைச் சங்கம் கேட்டுக் கொண்டிருப்பதாக அவர் சொன்னார். வாழை இலைகளின் விலை கிடுகிடுவென ஏறிவிட்டது. கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள உணவகத்தினர் தங்களுக்குத் தேவையான இலைகளை பகாங், மலாக்கா, மற்றும் சிரம்பான் ஆகிய பகுதிகளில் இருந்து வாங்கவேண்டிய நிலை ஏற்படுகிறது என்று தெரிவித்தனர். மலேசியா முழுவதும் சங்கத்தில் 1,263 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் 5,300 வாழை இலை உணவகங்களை நடத்தி வருகின்றனர். அடுத்த மாதம் விலையேற்ற வேண்டாம் என்ற சங்கம் விடுத்திருக்கும் கோரிக்கையை உறுப்பினர்கள் ஏற்று நடக்கவேண்டும் என்று டத்தோ இராமலிங்கம் கேட்டுக் கொண்டார். அவ்வாறு விலையை உயர்த்துகிறவர்கள் இருப்பார்களேயானால், அவர்கள் பிரிமாஸ் உறுப்பினர் அல்லாதவர்களாக இருக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார். பருவநிலை மோசமடைந்திருப்பது மற்றும் போக்குவரத்து செலவினங்கள் அதிகரித்து இருப்பது ஆகியவற்றின் காரணமாக வாழை இலைச் சாப்பாட்டு விலையை அதிகரிப்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது என்று பிரிமாஸின் துணைத் தலைவர் ஜே. சுரேஷ் தெரிவித்தார். வாழை இலைகள் கிடைப்பது என்பது பருவநிலையைப் பொறுத்ததாக இருக்கின்றன. மோசமான பருவநிலையின் போது இலைகள் அழிந்து விடுகின்றன. இதனால் சப்ளை குறைவதால் இலைகளின் விலை அதிகரித்து விடுகிறது என்று ஆனந்த பவண் உணவக குழுமத்தின் உரிமையாளர் வி.ஹரிகிருஷ்ணன் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்