இலங்கை போர் மீதான தணிக்கை செய்யப்படாத ஆவணப் படத்தை திரையிட்ட மனித உரிமை ஆர்வலர் லீனா ஹென்றி ஒரு குற்றவாளி என மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.இந்தத் தீர்ப்பை வழங்கிய மாஜிஸ்திரேட் முகமட் ரெஹான் முகமட் அரிஸ், தண்டனை விதிப்பை மார்ச் 22க்கு ஒத்தி வைத்தார். கருணை மனு மீதான தங்களுடைய வாதத் தொகுப்புகளை மார்ச் முதல் தேதிக்குள் சமர்ப்பிக்கும்படி டிபிபி நூரக்மால் பர்ஹான் அஸிஸுக்கும் லீனாவின் வழக்கறிஞர் நியூசின் சியூவிற்கும் ரெஹான் உத்தரவிட்டார். மூன்றாண்டு சிறைத்தண்டனை அல்லது 50,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இந்த இரண்டையும் லீனா எதிர்நோக்கியுள்ளார். இவர் இதே மாஜிஸ்திரேட்டினால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டார். எனினும் இந்த மாஜிஸ்திரேட் நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், புசாட் கொமாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான லீனாவை எதிர்வாதம் புரியும்படி உத்தரவிட்டது. இருபத்தாறு ஆண்டுகளாக நீடித்த இலங்கை உள்நாட்டுப் போர் மீதான ஓர் ஆவணப்படத்தை திரையிட்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டி ருந்தது. லீனா இந்தக் குற்றத்தை 2013 ஜூலை 3ஆம் தேதி கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீனர் வர்த்தக சபையின் மண்டபத்தில் புரிந்ததாகவும் கூறப்பட்டது. நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தான் மேல்முறையீடு செய்யவிருப்பதாக லீனா நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்