img
img

ஜிஞ்சாங் உத்தாரா நீண்ட வீடுகள் விவகாரம்!
புதன் 22 பிப்ரவரி 2017 13:20:08

img

நீண்ட வீடுகள் பிரச்சினையில் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் வழங்கியுள்ள வாக்குறுதிகள் தேர்தலுக்கான வாக்குறுதியாக மட்டும் இருந்துவிடக் கூடாது என ஜிஞ்சாங் உத்தாரா நீண்ட வீடு குடியிருப்பாளர்களின் பிரதிநிதியான ஆறுமுகம் மாரிமுத்து தெரிவித்தார். சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஜிஞ்சாங் உத்தாரா நீண்ட வீடு விவகாரத்தில் பல பிரச்சினைகள் எழுந்த வண்ணமாக உள்ளன. அதிலும் தேர்தல் ஆண்டு என்றால் மட்டுமே அரசியல்வாதிகளின் வருகையும் வாக்குறுதிகளும் இங்கு அதிகம் காணப்படும். இனியும் இதையெல்லாம் நம்பி ஏமாற இங்குள்ள மக்கள் தயாராக இல்லை. வாய் வழியாக வரும் வாக்குறுதிகளுக்கு இங்கு மதிப்பில்லை. மாறாக அதனை முறையான கடிதம் வழி உறுதிப்படுத்தினால் மட்டுமே இங்குள்ள மக்கள் அதனை நம்புவார்கள் என அவர் சொன்னார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆங்கில பத்திரிகை ஒன்றில் ஜிஞ்சாங் உத்தாரா நீண்ட வீடுகள் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடும் என்றும் அவர்கள் ஓரிரு மாதங்களில் புதிய மலிவு விலை வீடுகளுக்கு மாற்றப்படுவர் என்றும் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் தெரிவித்திருந்தார். மேலும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம், உர்பான் வெல்பேயிங் நிறுவனம், வீடமைப்புத் துறை அமைச்சர் இதன் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இங்குள்ள 991 குடியிருப்பாளர்களுக்கு மலிவு விலை வீடுகள் வெ.35 ஆயிரத்திற்கு வாடகை மூலம் வீட்டை பெறும் திட்டத்தின் மூலம் விற்கப்படும். ஸ்ரீ அமான் எனும் அந்த புதிய வீடமைப்புத் திட்டமானது ஜிஞ்சாங் உத்தாரா நீண்ட வீடுகள் இருக்கும் இடத்திலிருந்து 500 மீட்டரில் அமைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அவர் வழங்கியுள்ள வாக்குறுதிகளை உறுதிப்படுத்தும் வகையில் எங்களுக்கு கடிதங்கள் வழங்கப்பட வேண்டும். மேலும் இதன் தொடர்பில் இங்குள்ள மக்களை நேரில் சந்தித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் ஆறுமுகம் தெரிவித்தார். கடந்த 1992ஆம் ஆண்டு இதே போன்ற வாக்குறுதியை மத்திய அரசு வழங்கியது. அதாவது 3 மாதம் முதல் மூன்று ஆண்டுகளில் இந்த நீண்ட வீடு விவகாரத்தில் தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்தது. இதுநாள் வரையில் நாங்களும், டத்தோ பண்டாராக பதவி வகித்த நால்வரைச் சென்று மன்றாடி விட்டோம். இதுநாள் வரை எங்களுக்கு விடிவு காலம் பிறக்கவில்லை. இனியும் இதுபோன்ற வாக்குறுதிகளை நம்பி நாங்கள் ஏமாறத் தயாராக இல்லை. உங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் எங்களின் வாக்குகள் உங்களின் கட்சிக்குதான் என ஜிஞ்சாங் உத்தாரா நீண்ட வீடு குடியிருப் பாளர்களின் சார்பில் ஆறுமுகம் இதனை தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img