img
img

கின்றாரா தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டடம்!
புதன் 22 பிப்ரவரி 2017 12:58:53

img

பூச்சோங், தாமான் கின்றாரா தமிழ்ப்பள்ளிக்கு புதிய நான்கு மாடிக் கட்டடம் நிர்மாணிக்கப்படும் என்றும் அதற்காக வெ.35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கடந்த 2012-ஆம் ஆண்டில் அறிவித்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், புதிய கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் இருப்பது குறித்து பெற்றோர்கள் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளனர். 2012 ஜனவரி 22-ஆம் தேதி பிரதமர் நஜீப் அப்பள்ளிக்கு வருகை மேற்கொண்டபோது இந்த அறிவிப்பினை செய்தார். எனினும், தற்போதுள்ள கின்றாரா பள்ளிக்கூடத்திற்கு அருகே உள்ள நிலத்தில் புதிய கட்டடத்திற்கான கட்டமைப்பு போடப்பட்டு அஸ்திவார பணிகள் மேற்கொள்ளப்பட்டதோடு சரி. இதுவரை ஒரு தூண் கூட எழுப்பப்படவில்லை, ஒரு செங்கல்லையும் நகர்த்தவில்லை என்று அவர்கள் மலேசிய நண்பனிடன் நேற்று தெரிவித்தனர். புதிய கட்டடத்திற்கு பிரதமர் அறிவித்ததோ வெ.35 லட்சம் ஒதுக்கீடு. ஆனால், வெ.20 லட்சம் செலவில் அந்த 4 மாடிக் கட்டடம் விரைவில் கட்டப்படும் என்று கல்வி துணையமைச்சர் டத்தோ பி.கமலநாதன் கடந்த 2016 நவம்பர் 22-ஆம் தேதி அப்பள்ளியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது கூறியிருந்தார். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் கின்றாரா தமிழ்ப்பள்ளியில் பல ஆண்டுகள் வகுப்பறை பற்றாக் குறை பிரச்சினை நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது. தொடக்கத்தில் இக்கட்டட நிர்மாணிப்பு தொடர்பில் பல சிக்கல்கள் இருந்ததாகவும், அவை களையப்பட்டு கட்டட நிர்மாணிப்பிற்காக வெ.20 லட்சம் நிதி வழங்கப் பட்டுள்ளதாகவும் அன்று கூறிய கமலநாதன், அச்சிக்கல்கள் பற்றி விரிவாக விளக்கமளிக்கவில்லை. அரசாங்கத்தின் ஒதுக்கீடு வெ.35 லட்சத்திலிருந்து எப்படி வெ.20 லட்சமாகக் குறைந்தது என்பதும் புரியவில்லை என்று கின்றாரா தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் வினவினர். பிரதமர் அறிவித்த ஒதுக்கீட்டு தொகை குறைக்கப்பட்டது ஏன் என்பதையும் கமலநாதன் தெரியப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கூறினர். அந்த வெ.20 லட்சத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜகுமாரன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முருகன், சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் டேனியல் அமலதாஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இதனிடையே, தமிழ்ப்பள்ளிக்கூட மேம்பாட்டுப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் பொருட்டு தகுதியான குத்தகையாளர்களை நிர்மாணிப்பதில் காலம் தாழ்த்தக்கூடாது என்று பிரதமர் நஜீப் நினைவுறுத்தியிருப்பதை சம்பந்தப்பட்ட பெற்றோர் குறிப்பிட்டுக் கூறினர். தமிழ்ப்பள்ளிக்கூட மேம்பாட்டுத் திட்டங்கள் அமலாக்கம் செய்யப்படுவதில் மெத்தனப் போக்கு காட்டப்படுவது குறித்து தாம் அதிருப்தி கொள்வதாக பிரதமர் கூறியிருந்தார். 2014 பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெற்ற, தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்திற்கான நடவடிக்கை திட்டத்தை தொடக்கி வைக்கும் ஒரு நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறியிருந்தார். பிரதமர் இவ்வாறு கூறியிருக்க கின்றாரா தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் இந்த ஐந்தாண்டு கால தாமதத்திற்கு கமலநாதன் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினர் விளக்கம் தருவார்களா என்று பெற்றோர் மேலும் வினவினர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img