போலீஸ் தடுப்புக்காவலில் மரணமடைந்த எஸ். பாலமுருகனின் உடல் மீது நடத்தப்பட்ட இரண்டாவது பிரேதப் பரிசோதனை அவர் கடுமையாக தாக்கப்பட்டதை உறுதிப்படுத்துகிறது. அச்சோதனையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் அதில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வழக்குரைஞர்கள் என். சுரேந்திரனும் லத்தீபா கோயாவும் வலியுறுத்தியுள்ளனர்.இரண்டாவது பிரேதப் பரிசோதனை பாலமுருகன் குடும்பத்தினரின் அச்சத்தை உறுதிப்படுத்தியுள்ளது. நெஞ்சு, தலை, கால்கள் பின்புறம் உட்பட அவரது உடலின் பல பாகங்களில் காயங்கள் காணப்பட்டன. கோலாலம்பூர் மருத்துவமனை மருத்துவர்களின் அறிக்கைப்படி, பாலமுருகனுக்கு இருதயப் பிரச்சினை இருந்தது. போலீஸ் தடுப்புக்காவலில் அவர் கடுமையாக தாக்கப்பட்டதாலும் முரட்டுத்தனமாக நடத்தப் பட்டதாலும் மாரடைப்பைத் தூண்டியுள்ளது. கோலாலம்பூர் மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனை அறிக்கை நேற்று போலீசார் உடனிருக்க பாலமுருக னின் குடும்பத்தாரிடமும் வழக்கறிஞர்களிடமும் வழங்கப்பட்டது. இந்த மரணத்திற்கான காரணம் குறித்து வேறு எந்த சந்தேகமும் இல்லாததால் இன்னொரு விசாரணை தேவையில்லை என்று கூறிய வழக்கறிஞர்கள், இந்தக் குற்றத்திற்குப் பொறுப்பானவர்களை தாமதமின்றி நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்