ஜசெக ஒரு சின்னஞ்சிறிய கட்சி என்பதால் இக்கட்சியின் ஆலோசகர் பிரதமராக வர முடியாது என்று துன் டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார். அம்னோ வீழ்ச்சியடைந்தால் லிம் கிட் சியாங் பிரதமராக வருவார் என்று பிரதமர் டத்தோ டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் குறிப்பிட்டிருந்தார் என்று பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா தலைவருமான மகாதீர் சுட்டிக் காட்டி யிருந்தார். கிட் சியாங் எப்படி பிரதமராக வர முடியும் என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் இவரின் கட்சி சிறிய கட்சி. ஜசெக சிறியது என்பது குறித்து மகாதீர் விரிவாக விளக்கம் தரவில்லை. சனிக்கிழமையன்று இங்குள்ள மக்க ளுடனான சந்திப்புக் கூட்டத்தில் டாக்டர் மகாதீர் உரையாற்றினார். துன் அப்துல்லாவிற்குப் பதிலாக டத்தோஸ்ரீ நஜீப் பிரதமராக வருவதற்கு நான் ஆதரவு தெரிவித்தேன். அதற்காக இப்போது மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் மகாதீர். டாக்டர் மகாதீர் 22 ஆண்டுகாலம் பிரதமராக இருந்தார். வாக்காளர்கள் தங்களின் வாக்குரிமையினை விவே கமாக பயன்படுத்த வேண்டும் என்று இவர் கேட்டுக் கொள்கிறார். மகாதீர் ஒரு காலத்தில் அம்னோ தலைவராக இருந்தவர். அம்னோவை ஆதரிக்காதீர்கள் என்று நான் மக்களை கேட்டுக் கொள்வது ஒரு வகையில் எனக்கு வருத்தமாக இருக்கிறது.முன்பிருந்த கட்சியாக அம்னோ இப்போது இல்லை எனவும் மகாதீர் சுட்டிக்காட்டினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்