பேர்ட்ஸ் நெஸ்ட் வித் ரோக் சுகர் மற்றும் இம்பல்ஸ் சீலெர் என அடையாளமிடப்பட்ட இரு பொட்டலங்களுடன் கோலாலம்பூரிலிருந்து வந்த ஆடவர் தாவாவ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவர் கொண்டு வந்திருந்த பெட்டிகளைப் பரிசேதித்ததில் அவற்றில் வெ. 350,000 மதிப்பிலான 5 கிலோ கிராம் ஷாபு ரக போதைப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. கடந்த வெள் ளிக்கிழமை காலை 10.45 மணிய ளவில் சிலாங்கூரிலிருந்து வந்த சைபர் கேஃபேயின் உரிமை யாளருக்குச் சொந்தமான சூட்கே ஸில் அந்தப் பொட்டலங்கள் இருந்துள்ளன. அந்த ஆடவரின் வருகையை அறிந்த காவல்துறைக் குழு, விமான நிலையத்திலேயே சுற்றி வளைத்துப் பிடித் ததாகவும் அவர் போதைப்பொருள் விநியோகிப் பாளராக இருக்கலாம் என நம்பப் படுவதாகவும் தாவாவ் காவல் துறையின் தலைவர் அஸிஸ் டெண்ட் கமிஷனர் ஃபாட்ஜில் தெரிவித்தார். இரு பொட்டலங்களும் அலு மினிய மற்றும் கார்பன் காகி தங்க ளால் சுற்றப்பட்டிருந்த தாகவும் அவற்றில் ஷாபு போதைப் பொருள் இருந்தது கண்டறியப் பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே, கைது செய்ய ப்பட்ட ஆடவர் மீது ஏற்கெனவே இரு குற்றப் பதிவுகளும் இருப் பதும் விசாரணயில் தெரியவந்துள்ளது. விசார ணையின் பொரு ட்டு 7 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 12 மாதங்களில் தீபகற்ப மலேசியாவிலிருந்து சபா விற்கு போதைப்பொருள் கொண்டு வருவதற்கு மேற் கொள்ளப்பட்ட பல முயற்சிகளை மாநில காவல்துறையும் சுங்கத்துறையும் கண்டறிந்துள்ளன.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்