கிம் ஜோங் நாம் கொலைச் சம்பவ தொடர்பில் சந்தேகப் பேர் வழிகள் நால்வரை மலேசிய போலீசார் வேட்டை யாடி வருகின்றனர். இந்த சந்தேகப் பேர்வழிகள் அனைவரும் வடக்கொரியா நாட்டவர் என்று தேசியப் போலீஸ் படை துணைத்தலைவர் டான்ஸ்ரீ நூர் ரசிட் இப்ராஹிம் தெரிவித்தார். பிப்ரவரி 13இல் ஜோங் நாம் கொலையுண்ட அன்றே இந்த சந்தேகப்பேர்வழிகள் நாட்டை விட்டு வெளி யேறினர். கொலைச்சம் பவம் நிகழ்ந்த அன்றே இந்த நால்வரும் வெளி யேறினர் என்பது குறித்து நாங்கள் உறுதிப்படுத்த இயலும். அனைத்துலக போலீசார், இப்பிராந்தியத்தில் உள்ள இதர அமைப்புகளுடன் நாங்கள் ஒத்துழைத்து செயல்பட்டு வருகிறோம். நேற்று புக்கிட் அமானில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டான்ஸ்ரீ நூர் ரசிட் இப் ராஹிம் இவ்விவரங்களை வெளியிட்டார். தேடப்பட்டுவரும் நான்கு சந்தேகப் பேர்வழிகளின் விவரம் பின்வருமாறு: பிப்ரவரி 4இல் 33 வயது ரி ஜி யியோன் மலேசியா வந்தார், 34 வயது ஹோங் சோன் ஹாக் ஜனவரி 31இல் வந்தார். பிப்ரவரி 7இல் 55 வயது ஒ ஜோங் கில்லும் பிப்ரவரி முதல் தேதி 57 வயது ரி ஜா நாமும் இந்நாட்டிற்கு வருகை தந்தனர். கிம் ஜோங் நாம் கொலை தொடர்பில் இதுவரை யில் நால்வர் கைதாகியுள்ளனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்