தாமான் இம்பியான் மாஸ் செம்பனைத் தோட்டம் அருகேயுள்ள புறம்போக்கு நிலத்தில் எவ்வித அடிப்படை வசதியில்லாமல் கடந்த 15 வருடத்திற்கும் மேலாக குடியிருந்து வரும் சிவா துரைசிங்கம் (42), அவரின் மனைவி ஆர்.சரஸ்வதி (41) ஆகியோரின் ஐந்து பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல் லாமல் இருந்து வருவதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. அக்குடும்பம் குடியிருக்கும் இடத்திலிருந்து ஸ்கூடாயிலுள்ள பள்ளிக்கூடம் செல்வதற்கு 25 கிலோ மீட்டர் தூரம் இருப்பதால் அவர்களுக்கு போக்குவரத்து பிரச்சினை ஏற்பட்டு ஐந்து பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்ப முடி யாத சூழ்நிலை ஏற்பட்டதாக பிள்ளைகளின் தாயார் சரஸ்வதி கூறினார். குடும்பத்தில் சாந்தினிஸ்வரி (13), குணாளன் (12), தினகரன் (12), திஷாந்தினி (8), ரிஷாந்தினி (7) ஆகிய ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் சாந்தினிஸ்வரி மட்டும் கடந்த 2016ஆம் ஆண்டோடு ஆறாம் வகுப்பு வரை கல்வி பயின்றுள்ளார். இவ்வாண்டு படிவம் ஒன்றுக்கு செல்ல வேண்டி இருந்தது. ஆனால் போக்குவரத்து வசதியில்லாத காரணத்தால் அவரையும் மற்ற பிள்ளைகளையும் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக சரஸ்வதி தெரிவித்தார். பிள்ளைகள் ஐவரும் மற்ற பிள்ளைகளைப் போல் பள்ளிக்கூடம் செல்வதற்கு ஆவலாக இருக்கின்றனர். ஆனால் போக முடியவில்லையே என்று அவர் கூறிய போது அவரின் முகத்தில் சோகம் தாண்டவமாடியது. பிள் ளைகளை பள்ளிக்கூடத்திற்கு இந்த வருடம் அனுப்புவதற்கு எப்படியாவது ஒரு காரை வாங்கி அவர்களை அனுப் பலாம் என்று இருந்தபோது, அவர்கள் வளர்த்து வந்த 36 ஆயிரம் வெள்ளி மதிப்புடைய ஆறு கறவை மாடுகளை கொள்ளையர்கள் திருடிச் சென்று விட்டதாக அவர் தெரிவித்தார். இதனால் கார் வாங்கும் கனவும் கலைந்து விட்டதாக சரஸ்வதி கூறினார். இதனிடையே பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதால் அவர்கள் தங்களது மூன்று பிள்ளைகளுக்கும் 12 வயது கடந்தும் அடையாளக்கார்டை எடுக்காமல் இருக்கிறார்கள்.பிள்ளைகள் அனைவருக்கும் பிறப்புச் சான்றி தழ்கள் மைகிட் போன்றவை உள்ளன. நாங்கள்தான் கல்வி பயிலவில்லை, எங்களது பிள்ளைகளாவது கல்வி பயில வேண்டும். அவர்களின் எதிர்காலம் நல்லபடியாக இருக்க வேண்டும். அவர்களை அப்படியே விட்டுவிட மாட்டேன். இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அவர்கள் அனைவரையும் பள்ளிக்கு அனுப்பி விடுவேன் என்று பிள்ளை களின் தந்தை சிவா துரைசிங்கம் நண்பனிடம் தெரிவித்தார். இவருக்கு உதவ நினைக்கும் சமூகத் தலைவர்கள் 0113-6778281 என்ற கைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்