கோலகுபுபாரு தமிழ்ப் பள்ளியின் எதிரில் அமைந்துள்ள ‘ஆலோங்’ எனப்படும் வட்டிக் கடையின் பதாகை உலுசிலாங்கூர் மாவட்ட மன்ற அதிகாரிகளால் அகற்றப்பட்டது. பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில், மாவட்ட மன்ற உறுப்பினர் ஸ்ரீ விக்னேஷ் மற்றும் கோலகுபுபாரு சட்ட மன்ற உறுப்பினர் லீ கீ யோங் ஆகியோரின் முயற்சியால் அப்பதாகை அகற்றப் பட்டது. கல்வி மையங் களுக்கு அருகில் மதுக் கடைகளோ, கேளிக்கை சூதாட்ட மையங்களோ மற்றும் வட்டிக் கடைகளோ இருப்பது ஏற்புடை யதாகாது என நண்பன் நாளிதழ் கடந்த 2.11.2016 ஆம் நாள் செய்தி வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. மாவட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க உலுசிலாங்கூர் மாவட்ட மன்றத் தலைவராக புதிதாக பொறுப்பேற்று வந்திருக்கும் ஹாஜா நோராய்னியின் உத்தரவுப்படி அந்த பதாகை அகற்றப்பட்டது. பள்ளிக்கு எதிரில் இருந்த வட்டிக்கடை பதாகை அகற்றப்பட்டது அறிந்து பள்ளி நிர் வாகமும், பேற்றோர் ஆசிரியர் சங்கத்தினரும் பொதுமக்களும் மாவட்ட மன்ற தலைவருக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் மாவட்ட மன்ற உறுப்பினருக்கும் நன்றியினத் தெரிவித்துக் கொண்டனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்