புக்கிட் அமான் போலீஸ் ஏசிபி பதவியில் இருக்கும் அதிகாரி எனக் கூறிக்கொண்டு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை சிறப்பு டெண்டரில் வாங்குவதற்கு ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி 5 நபர்களிடம் சுமார் 74 லட்சம் வெள்ளி நம்பிக்கை மோசடி செய்த ஆடவர் பிடிப்பட்டார். வயது 47 மதிக்கத்தக்க இந்த ஆடவர் போலீஸ் சீருடை அணிந்து கையில் போலீஸ் சட்ட புத்தகங்களும் தேசிய சட்ட புத்தங்களுடனும் போலீஸ் தொப்பி, சின்னப் பதக்கங்களும் போலி துப்பாக்கியும் வைத்துக் கொண்டு பார்ப்பவர்களை நம்பச் செய்துள்ளார் என சிலாங்கூர் போலீஸ் வர்த்தக குற்றவியல் பிரிவின் தலைவர் முகமட் சுக்ரி அரிஃபின் செய்தியாளர்களிடம் கூறினார். இந்த மோசடி தொடர்பில் கிடைக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் இம்மாதம் கடந்த 16 ஆம் தேதியன்று இரவு 11.30 மணியளவில் இங்குள்ள ஷா ஆலம் செக்ஷன் 7 பகுதி யிலுள்ள வீட்டில் அதிரடி பரி சோதனை மேற்கொண்ட போலீசார் சம்பந்தப்பட்ட ஆடவனை கைது செய்ததாக ஏசிபி சுக்ரி தெரிவித்தார். இக்கைது நடவடிக்கை அடுத்து மறுநாள் அதே வீட்டில் 46 வயதுடைய ஆடவரின் மனைவியும் தடுத்து வைக்கப்பட்டதாக சுக்ரி மேலும் தெரிவித்தார். இந்த மோசடியில் ஒருவர் 60 லட்சம் வெள்ளியை இழந் துள்ளார் என்றும் அவர் சொன்னார்.கைதான ஆடவர் வசம் இருந்த அதிகமான போலி தங்க ஆபரணங்களும் சட்டப் புத்தகங்களும் காசோலை களும் வங்கிக் கார்டுகளும் ரசீதுகளும் உட்பட கார் ஒன் றும் போலி கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப் பட்டதாக ஏசிபி சுக்ரி தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்