இந்திய சமுதாயத்தின் அவல நிலைகளையும் பறிபோகும் சலுகைகளையும் முன் வைத்து, உண்மை நிலவரங் களை தகவலாக அம்பலப்படுத்தி வரும் மலேசிய நண்பனின் கேள்விகளுக்கு பதில் கொடுக்க முடியாமல் தமிழ்ப்பத்திரிகை மீது சீறிப் பாய்வது ம.இ.கா.வின் கலாச்சாரமா என பாடு இயக்கத்தின் பாரிட் புந்தார் தொகுதி தலைவர் மு.சிவகுமார் கேள்வியெழுப்பினார். பத்திரிகை சமுதாயத்தின் முதுகெலும்பாக இருந்து செயல் பட்டு வருகின்றது. அதற்கேற்றவாறு முன் வைக் கப்படும் கேள்விகளுக்கு விளக்கம் தர வேண்டுமேயொழிய பத்திரிகையை எதிர்ப்பது ஒரு கட்சிக்கு அழகல்ல என்றார். தாய்க்கட்சி என மார்த்தட்டிக் கொள்ளும் பேரா மாநில ம.இ.கா. டத்தோ வீ.இளங்கோ தலைமையில் மாநில அளவிலும் தொகுதிகள் அளவிலும் என்ன சாதித்துள்ளது என பாரிட் புந்தார் தொகுதியின் அமானா தலைவர் ச.பரந்தாமன் கேட்டார். கடந்த சில ஆண்டுகளாக மானியம் கேட்டு, பாரிட் புந்தார் தொகுதியிலிருந்து அரசு சாரா இந்திய இயக்கங்களும், இந்து ஆலயங்களும் விண்ணப்பம் செய்தும் அவை யாவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் வேண்டி யவர்களுக்கும் நெருங்கிய நண்பர்கள் தலைவராக இருக்கும் ஆலயங்களுக்கு மட்டும் மானியங்கள் அங்கீகரிக் கப்பட்டுள்ளதை அவர் அம்பலப்படுத்தினார். பாரிட் புந்தார் தொகுதியில் எத்தனை இந்தியர்களுக்கு கிரியான் மாவட்ட மன்றத்தில் வேலை வாய்ப்புகள் வழங் கப்பட்டுள்ளன? ம.இ.கா. உதவியில் எத்தனை இந்திய மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டுள் ளனர்? என பாரிட் புந்தார் பெக்கான் பாரு கிளை அமானா தலைவர் மு.லோகநாதன் பகிரங்க கேள்வியெழுப் பினார். இப்பிரச்சினைகள் யாவும் டத்தோ வி.இளங்கோ தலைவராக இருக்கும் பேரா மாநிலத்தில் நிகழ்ந்து கொண்டி ருக்கிறது. இது அவருக்கு தெரியாதா என அவர் சொன்னார். சமுதாயத்தின் குறைநிறைகளை பத்திரிகையில் எழுதும் போது அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் அதற்கு முறை யான பதிலையும் விளக்கத்தையும் தர வேண்டும். அதே வேளையில் இரு தரப்பும் பேசிதீர்த்துக் கொள்ள வேண் டும் என தொழிலதிபரும், சமூக சேவையாளருமான டத்தோ ஸ்ரீ ஆர்.அருணாசலம் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்