img
img

எஸ்பிஎம் மாணவர்களின் தகவல் கசிந்தது எப்படி?
ஞாயிறு 19 பிப்ரவரி 2017 12:35:27

img

கடந்த ஆண்டு (2016) ஐந்தாம் படிவ (எஸ்.பி.எம்) தேர்வினை எழுதி முடித்துள்ள மாணவர்களின் முழுமையான விவரங்கள் மலேசியக் கல்வி அமைச்சின் மூலம் கசிந்துள்ளனவா? என்ற சந்தேகம் மலேசியர்களிடையே எழுந்துள்ளது. எஸ்பிஎம் தேர்வினை எழுதியுள்ள மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகள், அரசாங்கம் பல்கலைக்கழக முத்திரையுடன் கூடிய கல்வி மையங்கள், அரசாங்கத்துறை சார்ந்த கூட்டுறவுக் கழகத்தின் கல்லூரிகள் என பல்வேறு கல்லூரிகளில் பயில்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ கடிதங்கள் மாணவர்களின் இல்ல முகவரிக்கு அனுப்பப்பட்டு வருவதினால் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் தனியார் கல்லூரிகளின் ஏமாற்று வேலைகளுக்கு பலியாகி உள்ளதாக நண்பன் குழு தகவல்களைப் பெற்றுள்ளது. தனியார் கல்லூரிகளின் அத்துமீறிய செயல் 2016 ஆம் ஆண்டில் எஸ்பிஎம் தேர்வினை எழுதி முடித்து விட்டு தேர்வு முடிவிற்காகக் காத்திருக்கும் மாணவர்களுக்கு தங்களது கல்லூரிகளில் படிப்பதற்கான வாய்ப்பிற்காகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக உள்ள டக்கிய செய்திகளைத் தாங்கிய கடிதங்களை வீட்டு முகவரிகளுக்கே அனுப்பி வருவதினால் பல மாணவர்கள் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நண்பன் குழு கருதுகின்றது. மேலும் எஸ்பிஎம் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களின் அனைத்து தகவல்களான * வீட்டு முகவரிகள் * படித்த இடைநிலைப்பள்ளிகளின் விவரங்கள் * அடையாள அட்டை எண்கள் * தொலைபேசி எண்கள் ஆகிய தகவல்கள் தனியார் கல்லூரிகளுக்கு எவ்வாறு கிடைக்கப்பெற்றன? என்ற கேள்விக்கு நண்பன் குழு பதிலைக் காண விரும்புகின்றது. மலேசியக் கல்வியமைச்சின் தேர்வு நிர்வாகப் பிரிவிற்கு எஸ்பிஎம் தேர்வினை எழுதும் மாணவர்களின் முழுமையான விவரங்கள் சமர்ப்பிக்கப்படும் நிலையில் மாணவர்களின் இரகசியமான தகவல்கள் எப்படி தனி யார் கல்லூரிகளுக்குக் கிடைத்தன என்பதற்கான விளக்கத்தினை மலேசியக் கல்வி அமைச்சு தர வேண்டியது அவசியமாகின்றது. எஸ்பிஎம் தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் மாணவர்களுக்கு அனுப்பப்படும் அழைப்புக் கடிதங்களில் (Surat Tawaran) பொதுப் பல்கலைக்கழகங்களின் (Universiti Awam -UA) சின்னங்கள் பயன்படுத்தப்படுகின்றன என பொதுப்பல்கலைக்கழகங்களும், மலேசிய உயர்கல்வி அமைச்சும் Kementerian Pendidikan Tinggi) அனுமதி வழங்கியுள்ளதா? என்பதற்கும் நண்பன் குழு விவரம் அறிய விரும்புகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக கடிதங்களை அனுப்புவதற்கு கடித உறைகள் அரசாங்க அதிகாரப்பூர்வ கடித உறையைப் பயன்படுத்தப்படும் (Urusan Rasmi) எனப்பயன்படுத்துவது கல்வியமைச்சின் விதிகளுக்கு உட் பட்டதா? என்பதையும் நண்பன் குழு அறிய விரும்புகின்றது. ஏமாற்றும் நடவடிக்கைகளா? தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே தனியார் கல்லூரிகளிலும், தனியார் பல்கலைக்கழகங்களிலும் பதிந்து கொள்வதற்காக ரிம 200 முதல் ரிம 500 வரையிலாக கட்டணமும் விதிக்கப்படும் நிலையில் அரசாங்கப் பல்கலைக்கழகத்தில் தங்களது பிள்ளைளுக்கு இடம் கிடைத்து விட்டதாக நினைத்துக் கொண்டு ஏமாற்றம் அடைந்திருக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பதாகவே நண்பன் குழு கருதுகின்றது. மலேசியக் காவல் துறையில் சேர்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக 2016 ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வினை எழுதிய மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வுகள் மாவட்ட காவல் துறையின் அலுவலகத்தில் நடைபெற்றதாக நண்பன் குழுவிற்குக் கிடைத்திருக்கும் புகாரில் உண்மை உள்ளதா? என்பதை மலேசியக் கல்வியமைச்சு உடனடியாக விசாரிக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்டிருக்கும் பெற்றோர்கள் நண்பன் குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கெனவே கல்வி விவரங்களிலும், உயர்கல்விவாய்ப்புகள் தொடர்பிலும் குறைவான தகவல்களைப் பெற்றி ருக்கும் சமூகமான இந்திய சமூகத்தில் உள் ள மாணவர்கள் தனியார் கல்லூரிகளின் வில்லங்கமான அழைப்புக் கடிதங்களினால் தனியார் கல்லூரிகளில் எதிர் காலத்திற்குப் பயன்படாத மேற்கல்வியைத் தொடர் வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கும் அபாயத்தினை நண்பன் குழு சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் இருப்பதாக உணர்கிறது. தகவல்கள் எங்கிருந்து கசிகின்றன? 2016 இல் எஸ்பிஎம் தேர்வினை எழுதியிருக்கும் அரசாங்கப்பள்ளி மாணவர்களும் தனியார் பள்ளி மாணவர்களும் மலேசிய தேர்வுக் கழகத்தின் (Lembaga Peperiksaan Malaysia) அகப்பக்கத்தின் வழி பதிந்து கொள்ள வேண்டிய பட்சத்தில் அனைத்து மாணவர்களின் விவரங்களும் இங்கே கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதற்கு அடுத்த நிலையில் மலேசியக் கல்வியமைச்சிடம் எஸ்பிஎம் மாணவர்களின் முழுமையான தகவல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. மாணவர்களின் தரவுகள் (APOM) எனப்படும் பதிவு தளத்தின் வழியாக முழுமையாகப்பெற முடியும். ஆக எஸ்பிஎம் தேர்வினை எழுதியுள்ள இரகசியத் தகவல்கள் மலேசியக் கல்வி யமைச்சிலிருந்து கசிகின்றதா? என்பதனை உடனடியாக விசாரிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக நண்பன் குழு கருதுகின்றது. எஸ்பிஎம் தேர்வினை 2016 ஆம் ஆண்டில் எழுதிய மாணவர்களின் விவரங்கள் அனைத்து தனியார் கல்லூரி களிடமும் இருக்கும் பட்சத்தில் மாணவர்களின் இரகசியமான தகவல்கள் எவ்வாறு கசிந்துள்ளன என்ற கேள்விக்கு மலேசியக் கல்வியமைச்சும், பள்ளிகளும், சம்பந்தப்பட்டுள்ள துறைகளும் மலேசியர்களுக்கு முழுமையான விளக்கத்தினைத் தர வேண்டும் என்ற கோரிக்கையினை நண்பன் குழு முன்வைக்கின்றது.

பின்செல்

மாணவர் செய்திகள்

img
தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு: விவேகம் விதைத்த தமிழ்ப்பள்ளி ஆண்டு 5/18

தமிழ்ப்பள்ளியில் தனக்குள் விதைக்கப்பட்ட தன்னம்பிக்கையே இன்றைய

மேலும்
img
பிடி 3 தேர்வில் இந்திய மாணவர்கள் சிறப்பு தேர்ச்சி: மயில்வண்ணன் 9ஏ பெற்று சாதனை!

பிடி 3 தேர்வில் பேராவில் இந்திய மாணவர்கள் பலர் சிறந்த புள்ளிகளை பெற்று

மேலும்
img
தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு : வெற்றிக்கு வித்திட்ட தமிழ்ப்பள்ளி ஆண்டு 5/16

பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளி உருவாக்கிய வர்த்தகர் - வீரமணி பெருமாள்

மேலும்
img
டெக் டெரெய்ன் கல்லூரியின் 10ஆவது பட்டமளிப்பு விழா - 400 திவெட் பட்டதாரிகளுக்கு வேலை உத்தரவாதம்

டெக் டெரெய்ன் கல்லூரி தனது 10ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற

மேலும்
img
தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளியில் இணைத்து வாழ்க்கையில் உயரவைத்த தமிழ் உணர்வாளர் ந.பச்சைபாலன்-ரே.கமலாதேவி தம்பதியர்.

தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img