என் மேல ஸ்பிரே அடிச்சுட்டாங்க’ இதுதான் வடகொரிய அதி பரின் சகோதரர் கிம் ஜோங் நாம் கடந்த திங்கட் கிழமை காலையில் உதிர்த்த கடைசி வார்த்தைகள். கோலாலம்பூர் இரண்டாவது அனைத்துலக விமான நிலை யத்தில் இரு பெண் உளவாளி களால் திரவ ஸ்பிரே தாக்குத லுக்கு ஆளான பின்னர் கிட்டத்த ட்ட 15 மீட்டர் தூரம் நடந்து சென்று, விமான நிலைய சேவை மைய அதிகாரிகளிடம் அவர் வலியால் துடித்த வாரே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த உதவிப் போலீசாரின் துணை யோடு, மூன்றாவது மாடியில் உள்ள விமான நிலைய கிளினிக்கிற்குக் கொண்டு செல்லப்பட்டார். அதன் பின்னர் அவரால் கடுமையான வலியால் கதற மட்டுமே முடிந்தது. எனினும், அங்கு அவர் சுயநினைவை இழந்ததைத் தொடர்ந்து, நிலைமையின் தீவிரம் கண்டு புத்ரா ஜெயா மருத்துவமனைக்கு அனுப்பப்பட் டார். எனினும், மருத்துவமனைக் குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே கிம் ஜோங் நாம் மரணமடைந்தார். முதலில் ஒரு கொரியர் என்றே அடையாளம் காணப்பட்ட நிலையில், பின்னர் அவர் வடகொரிய அதிபர் கிம் ஜோங் மின்னின் சகோதரர் எனத் தெரியவந்ததையடுத்து, இவ் விவகாரம் உள்நாடு மட்டுமின்றி அனைத்துலக நிலையிலும் பரபரப்பானது குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்