நாட்டில் சட்டவிரோதமாக வேலை செய்து வரும் அந்நியத் தொழிலாளர்களுக்கு தற்காலிக வேலை பெர்மிட்டை வழங்குவதற்கு ஏதுவாக அதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது. பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரையில் சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்து கொள் ளலாம். இவ்வாறு தங்களை பதிவு செய்து கொண்டவர்கள் மலேசியாவில் ஐந்து முக்கிய துறைகளில் சட்டப் பூர்வமாக வேலை செய்வதற்கு ஏதுவாக இ-கார்ட் பெர்மிட் வழங்கப்படும் என்று குடிநுழைவுத்துறை அறிவித் துள்ளது.சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களுக்கு தற்காலிக பெர்மிட் பதிவு தொடங்கியது! பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் தீபகற்ப மலேசியாவில் அனைத்து குடிநுழைவுத்துறை அலுவலகங்களிலும் இந்த பதிவு நடைபெறும் என்று குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முஸ்தாபார் அலி தெரிவித்தார். இந்த இ - கார்ட் பெர்மிட் என்பது தற்காலிகமாக வேலை செய்வதற்கான அனுமதி மட்டுமே. இந்தப் பதிவுக்கு எந்தவொரு கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மூன்றாம் தரப்பை நாட வேண்டியதில்லை. மாறாக அந்நியத் தொழிலாளர்கள் சுயமாக குடிநுழைவு அலுவலகத்திற்கு வந்து இந்தப் பதிவை செய்து கொள்ளலாம். இந்தப் பதிவுக்குப் பின்னர் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக்கொண்டுள்ள முதலாளிகள், அந்த தொழிலாளி சார்ந்துள்ள தூதரகங்களுக்குச் சென்று கடப்பிதழ் மற்றும் பெர்மிட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று முஸ்தாபார் விளக்கினார். இந்த இ- கார்ட் தற்காலிக பெர்மிட்டில் சம்பந்தப்பட்ட தொழிலாளியின் ்பயோமெட்ரிக்ீ பதிவு, எந்த முதலாளியிடம் வேலை செய்கிறார், பதிவு எண், நிறுவனத்தின் பெயர், குறியீட்டு எண் மற்றும் தலைமை குடிநுழைவு அதிகாரி, தலைமை போலீஸ் அதிகாரி கையொப்பம் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும். அகதிகள் அந்தஸ்துக்கான ஐ.நா. தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அகதிகள் அட்டை வைத்து இருக்கும் அந்நியத் தொழிலாளர்கள் இந்த இ-கார்ட் தற்காலிக பெர்மிட்டைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியாது. அதேவேளையில் இந்த இ -கார்டுக்கு விண்ணப்பிக்கும் சட்டவிரோதத் தொழிலாளர்கள், முதலாளிமார்களை கொண்டு இருக்க வேண்டும். தவிர எந்தவொரு குற்றப்பதிவையும் கொண்டு இருக்கக்கூடாது. முதலாளிமார்களிடமிருந்து தப்பி ஓடியவர்களாக இருக்கக்கூடாது என்பதே ஒரு சட்டவிரோதத் தொழிலாளர் இ- கார்டை பெறுவதற்குரிய தகுதியாகும் என்று அவர் விளக்கினார். தற்போது முதலாளிமார்களிடம் நிலவி வரும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக அவர்கள் சட்டவிரோத தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி வருகின்றனர். அந்தத் தொழிலாளர்களையே அவர்கள் சட்டப்பூர்வ மாக்கிக் கொள்ளும் ஒரு நடவடிக்கைதான் இந்த தற்காலிக வேலை பெர்மிட் வழங்கும் திட்டமாகும் என்று அவர் விளக்கினார். பண்ணைத் தொழில் , சேவைத்துறை உற்பத்தித்துறை ,கட்டுமானம் விவசாயம் ஆகிய ஐந்து துறைகளில் மட்டுமே பணியாற்றுவதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுவர் என்று அவர் சொன்னார். வழங்கப்பட்டுள்ள காலக்கெடு இனியும் நீட்டிக்கப்படாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்