நாட்டில் தடுப்புக் காவல் மரணச் சம்பவங்கள் தொடர்வது தொடர்பில் கலந்து பேசுவதற்கு உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடியைச் சந்திக்க ஜனநாயக செயல்கட்சி (ஜசெக) விரும்புகிறது. ஆகக் கடைசியாக தடுப்புக் காவலில் இருந்த எஸ்.பால முருகன் (வயது 44) கடந்த வாரம் உயிரிழந்தார். இந்நிலையில் ஜசெக மூத்த தலைவரும் கேலாங்பாத்தா தொகுதி மக்களவை உறுப்பினருமான லிம் கிட் சியாங் நேற்று பால முருகன் குடும்பத்தினரை சென்று கண்டார். அப்போது தடுப்புக் காவலில் மரணம் நிகழ்வதை முடிவு கட்டும் வகையிலான தீர்வைக் கண்டறிய உள்துறையமைச்சர் ஜாஹிட்டுடனான சந்திப்பிற்கு வேண்டுகோள் விடுப்பேன் என்றார் லிம். தடுப்புக் காவல் மரணம் மூர்க்கத்தனமானது. ஈராயிரத்தாம் ஆண்டு முதல் 243 பேர் போலீஸ் தடுப்புக் காவலில் மரணமடைந்துள்ளனர். அவ்வாறான சம்பவங்கள் நடக்காமல் உடனடியாகத் தடுக்க வேண்டும். நாம் சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்த வேண்டும். யாரையும் தடுப்புக் காவலில் மரணமடையும் வகையில் நடத்த இயலாது. இவ்விஷயத்தில் தொடர் நடவடிக்கையை மேற்கொள்வேன். நிச்சயம் நீதி கிடைக்கும் என பாலமுருகனின் குடும்பத்தாருக்கு அவர் உறுதியளித்துள்ளார். தடுப்புக் காவலில் மரணமுற்றோருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் நீதி கிடைக்க என்ன மாதிரியான நடவடிக்கை தேவை என நாடாளுமன்ற மூத்த உறுப்பினரான லிம் தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்காருக்கு கேள்வி விடுத்துள்ளார். தடுப்புக் காவல் மரணச் சம்பவங்களை புலனாய்வு செய்ய அரச விசாரணை ஆணையம் அமைக்க 2004இல் அப்போதைய பிரதமர் துன் அப்துல்லா அகமட் படாவி பரிந்துரைத்தார். அது தொடர்பில் போலீஸ் இதுநாள் வரை அமைதியாக உள்ளது.தடுப்புக் காவல் மரணச் சம்பவங்கள் தொடர்பில் மலேசிய மனித உரிமை ஆணையம், சுஹாகாம் ஆகிய அமைப்புகள் மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்