தமிழ்ப்பள்ளியில் படித்ததால்தான் போலீஸ் துறையில் இன்று போலீஸ் படையில் உயர்நிலை அடைய காரணமாக இருந்ததாக புக்கிட் இண்டா காவல் நிலையத் தலைவர் போலீஸ் உதவி சூப்ரிண்டெண்டன் கே.ராஜகோபால் குறிப்பிட்டார். தமிழ்ப்பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு தான் உதாரணம் என குறிப்பிட்ட அவர் இலட்சிய கனவு களுடன் இலட்சியத்தை நோக்கி வெற்றிப் பாதங்களை பதியுங்கள் எனவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். இங்கு உலுத்திராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆறாம் ஆண்டு மாணவர்களுக்காக வழக்கறிஞர் டி.ராஜசேகரன் தலைமையிலான சமூக மேம்பாடு, கல்வி, சட்ட விழிப்புணர்வு இயக்க ஏற்பாட்டில் நடைபெற்ற விழிப் புணர்வு கருத்தரங்கில் உரையாற்றிய ஏஎஸ்பி கே.ராஜ கோபால், தான் பகாங், ரவூப் சேரோ தோட்டத்தில் பிறந்து அத்தோட்டத் தமிழ்ப்பள்ளியிலேயே தொடக்கக் கல்வியை முடித்ததை நினைவு கூர்ந்ததோடு தனது பெற்றோரின் வசதி குறைந்த வாழ்க்கையிலும் தங்கள் குடும்பம் இன்று தலைநிமிர்ந்து நிற்பதற்கு கல்வியே அடித்தளமாக இருந்ததாக குறிப்பிட்டார். பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் தெய்வமாக மதியுங்கள். தினமும் பள்ளிக்கு செல்லும் முன்பு பெற் றோரை வணங்கி விட்டு செல்லுங்கள். பள்ளிகளில் நடக்கும் விஷயங்களை பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள் ளுங்கள் என மாணவர்களை கேட் டுக் கொண்ட ஏஎஸ்பி கே.ராஜ கோபால் இடைநிலைப் பள்ளி களுக்கு செல்லும்போது ஏற்படக் கூடிய சூழ்நிலைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார். முன்னதாக துன் அமீனா தமிழ்ப் பள்ளியின் முன்னாள் தலைமையாசி ரியர் கே.பூபாலன் யூபிஎஸ்ஆர் தேர்வு முறையில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளதை மாணவர்களுக்கு விளக்கினாலும் அதில் வெற்றிக் கொள்ள மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து விவ ரித்தார். கல்விதான் நமது உயிர் நாடி. அதனை வெற்றிக் கொள்ள மாணவர் களுக்கு உறுதி மனப்பான்மை வேண்டும் எனவும் கே.பூபாலன் வலி யுறுத்தினார். முன்னதாக பெற்றோர் களுக்கும் தனியாக கருத்தரங்கு நடைபெற்ற வேளையில் மாநிலம் முழுவதும் தமிழ்ப்பள்ளிகளில் இது போன்ற பயிலரங்கை தமது இயக்கம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் டி.ராஜசேகரன் தெரிவித்தார். இயக்கத்தின் செயலாளர் பி.சங்கர், பள்ளி தலைமையாசிரியர் எல்.சுப்பிர மணியம், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டத்தோ பி.சுகுமாறன் ஆகி யோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள
மேலும்தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்
மேலும்ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த
மேலும்அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்
மேலும்