வேகக்கட்டுபாட்டை இழந்த கார் ஒன்று அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்ததில் ஆடவர் மரணமடைந்தார்.இச்சம்பவம் நேற்று காலை 10.30 மணியளவில் ஜாலான் ஈப்போவில் உள்ள பெலாங்கி இண்டா அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்தது. அடுக்குமாடி குடியிருப்பின் 3ஆவது மாடியில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் இருந்த தடுப் புச் சுவரை மோதிய அக்கார் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.இவ்விபத்தில் காரில் சிக்கிக் கொண்ட ஆடவரை வெளியே கொண்டு வருவதற்கு அங்கிருந்த மக்கள் பல மணி நேரம் போராடினர்.அவர்களின் முயற்சிகள் அனைத்துமே தோல்வியில் தான் முடிந்தன. அவர்களால் காரின் கதவுகளை திறக்க முடியவில்லை. தகவல் கிடைத்த தீயணைப்புப் படை வீரர்கள், போலீஸ் அதிகாரி கள் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். காரின் கதவுகளை வெட்டி உள்ளே சிக்கியிருந்த ஆடவரை வெளியே கொண்டு வருவதற்கான முயற்சிகளை தீயணைப்புப் படை வீரர்கள் மேற்கொண்டனர். ஒரு சில நிமிடங்களில் அந்த ஆடவரை தீயணைப்புப் படை வீரர்கள் வெளியே கொண்டு வந்தனர். ஆனால் தலையில் பலத்த காயங்களுக்கு இலக்கான காரோட்டி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அவ்வாடவரின் உடலை கோலா லம்பூர் பெரிய மருத்துவமனைக்கு சவப் பரிசோதனைக்காக போலீசார் எடுத்து சென்றனர். இதனிடையே மூன்றாவது மாடியின் சுவரை மோதிய கார் கீழே விழுந்த போது அடுக்குமாடி குடியிருப்பில் மிகப் பெரிய சத்தம் கேட்டது.இதனால் வீடுகளில் இருந்த நாங்கள் அச்சத்தில் அதிர்ந்து போனோம் என்று அங்கு குடியி ருந்தவர்களில் சிலர் கூறினர்.விபத்தில் மரணமடைந்த ஆடவர் ஒரு குத்தகையாளர் ஆவார். அடுக்குமாடி வீட்டில் குடியிருக்கும் தன் பணியாளர் களை அழைத்துச் செல்ல அவர் தினசரி இங்கு வருவார் என்று தகவல்கள் கூறுகின்றன.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்