கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை, வட கொரிய அதி பரின் ஒன்று விட்ட மூத்த சகோதரர் கிம் ஜோங் நாம் படுகொலை செய் யப்பட்ட சம்பவம் தொடர்பில் வியட் நாமிய கடப்பிதழ் பெற்றிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட் டுள்ளார். சுமார் 20 வயதுடைய அப்பெண் நேற்று காலை 9 மணிக்கு அவ்விமான நிலையத்தின் முன்புறம் போலீசாரால் கைது செய்யப்பட்டாள் என்று போலீஸ் படை துணைத் தலைவர் டான்ஸ்ரீ நோர் ரஷிட் கூறினார். வியட்னாமிற்கு திரும்புவதற்காக அவள் விமான நிலையத்திற்கு வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ரகசிய கேமராவில் பதிவு செய்யப்பட்ட சந்தேகப் பேர்வழியான அந்த பெண்ணும் இந்த பெண்ணும் ஒருவரா என்று கேட்கப்பட்ட போது, அது அவள்தான் என்று நோர் ரஷிட் பதிலளித்தார். ரகசிய கேமரா பதிவிலிருந்து நாங்கள் அவரை அடையாளம் கண்டுள்ளோம். அவளை கைது செய்து, சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தில் விசாரணைக்காக தடுத்து வைத்திருக்கிறோம் என்றார் அவர். திங்கட்கிழமை நிகழ்ந்த அச்சம்பவத்தில் அவள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம். அது மட்டுமின்றி, எங்கள் பிடியில் இருக்கும் அந்த பெண் உண்மையில் வியட்னாமிய பிரஜைதானா என்பதை உறுதி செய்ய வட கொரிய மற்றும் வியட்னாமிய ராஜதந்திரிகளுடன் நாங்கள் தொடர்பு கொண்டு வருகிறோம் என்றார் அவர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்