ஓட்டுநர்களுக்கு போலி மருத்துவ சான்றிதழ்களை வழங் கியதற்காக ஏழு மருத்துவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். ஓட்டுநர்கள் தங்களின் லைசென்சை புதுப்பிப்பதற்காக மருத்துவர்களிடமிருந்து போலி சான்றிதழ் பெற்றுள்ளனர். குளுகோர், பத்து பெரிங்கி, புக்கிட் மெர்தாஜம், செபராங் பிறை ஆகிய இடங்களில் ஆக மொத்தம் ஏழு கிளினிக்குகளில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணை யம் அதிரடி பரிசோதனை மேற்கொண்டபோது இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. ஆணையத்தின் குழு ஒன்று கிளினிக்குகளில் செவ்வாய்க் கிழமை மூன்று மணியிலிருந்து பரிசோதனை நடத் தியதாக பினாங்கு மாநில மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் டத்தோ அப்துல் அஜிஸ் அமான் தெரிவித்தார். அனைத்து ஓட்டுநர்களுக்கும் குறிப்பாக பேருந்து டாக்சி ஓட்டு நர்களுக்கும் உடல் ஆரோக்கிய தகுதி சான் றிதழை மருத்துவ பரிசோதனை இல்லாமல் மருத் துவர்கள் வழங்கியுள்ளார்கள் என்று தெரிய வருகிறது. மாநில இயக்குநர் டத்தோ அப்துல் அஸிஸ் இவ்வாறு செய்தியாளர் களிடம் தெரிவித்தார். இந்த கிளினிக்குகள் பெரும் பாலும் நான்கு ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை செயல் பட்டு வருவதாக அவர் தெரிவித் தார். ஏழு மருத்துவர்களை தடுத்து வைக்கும் உத்தரவுக்கு மாஜிஸ் திரேட் நீதிமன்றத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணை யம் விண்ணப்பித்துள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்