தன் கைப்பையை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற ஆடவரை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்ற மாது கட்டுப்பாட்டை இழந்து விளக்கு கம்பத்தை மோதி மாண்டார்.காலை 8.15 மணியளவில் கம்போங் பாக் எலோங் கில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் சித்தி ரோஹைனி வஹாப் (வயது 54) உயிரிழந்தார். சம்பந்தப்பட்ட மாது கம்போங் தெலொங்கிலிருந்து கிளந்தான் மலாயா பல்கலைக்கழகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவர் அங்குள்ள காபேவில் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். வேலை இடத்திற்கு சென்று கொண்டிருந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆடவர் அவரின் கைப்பையை கொள்ளையிட்டு சென்றுள்ளார். இவரும் பயமின்றி அந்த நபரை துரத்திச் சென்றுள்ளார். வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திய அவர், கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்திலுள்ள விளக்கு கம்பத்தை மோதியுள்ளார்.இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ரத்த கசிவு அதிகமாக இருந்ததால் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக கிளந்தான் மாநில போலீஸ் படையின் துணைத் தலைவர் டின் அகமட் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்