பாலமுருகனின் தடுப்புக் காவல் மரணம் தொடர்பில் இரண்டாவது பிரேதப் பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 8இல் காவல்துறை தடுப்புக் காவலில் பாலமுருகன் இறந்து கிடந்தார். இருதய நோய் காரணமாக பாலமுருகன் மரணமுற்றார் என்று முதலாவது பிரேதப் பரிசோதனை முடிவுகள் தெரிவித்தன. கிள்ளான் மருத்துவமனையிலிருந்து பிரேதம் இரண்டாவது பிரேதப் பரிசோதனைக்காக கோலாலம்பூர் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும்.இரண்டாவது பரிசோதனை வேண்டும் என்று கோரி பாலமுருகனின் இளைய சகோதரர் பால்ராஜ் விண்ணப்பம் செய்திருந்தார். இரண்டாவது பிரேதப் பரிசோதனைக்கு நீதிபதி அஸ்மான் உசேன் அனுமதித்தார். பால்ராஜுவின் விண்ணப்பத்திற்கு துணை பப்ளிக் பிராசிகியூட்டர் பக்கிஷா அபு பக்கார் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.தன் சகோதரர் இருதய நோய் காரணமாக மரணமுற்றார் என்று முதலாவது பிரேதப் பரிசோதனையின் முடிவுகளை தனது குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வதாக இல்லை என பால்ராஜ் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். தன் சகோதரர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும்போது அவர் ரத்த வாந்தி எடுத்தார். அவர் காவல்துறையினரால் தாக்கப்பட்டார் என்று என் சகோதரருடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள இதர இரண்டு சந்தேகப் பேர்வழிகளும் எங்களின் வழக்கறிஞரிடம் தெரிவித்தனர். சுஹாகாம் என்ற மனித உரிமை ஆணையமும் அமலாக்க அமைப்பு உயர்நெறி ஆணையமும் பாலமுருகனின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்