பினாங்கிற்கும் சரவாவிற்கும் இடையே கடந்த சனிக்கிழமை நடந்த சூப்பர் லீக் போட்டியின் போது வாண வெடி களை வைத்திருந்த குற்றத்தை ஒப்புக் கொண்ட கால் பந்தாட்ட ரசிகர்கள் இருவ ருக்கு இங்குள்ள ஜாவி மாஜிஸ்தி ரேட் நீதிமன்றம் நேற்று தலா நான்கு நாள் சிறைத் தண் டனையுடன் வெ. 6,000 அபராதமும் விதித்துள்ளது. தொழிற்சாலை தொழிலாளர் முகமட் அபிஸால் முகமட் அஸிஸ் (வயது 22), மீனவர் முக மட் கைரி மாட் யூசோப் (வயது 28) ஆகிய அவ்விருவரும் அபராதம் செலுத்தத் தவறினால் ஆறுமாத சிறைத் தண்டனை என்றும் மாஜிஸ்திரேட் ஷம் சோல் அஸ்வா மார்த்தாட்ஸா அறிவித்துள்ளார். ஸ்டேடியம் பத்து கவானில் முகமட் அபிஸால் 12 டிராகன் பட்டாசுகள் அடங்கிய இரு சிப்பங்களை வைத்திருந்த தாகவும் முகமட் கைரி மெர்ச்சுன் போலா நான்கினை கொண்டு வந்ததாகவும் 1957ஆம் ஆண்டு வெடிப் பொருட் கள் சட்டப் பிரிவு 8இன் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்