தனிமையில் இருந்த மூதாட்டியின் வீட்டில் நுழைந்த இரு கொள்ளையர்களில் ஒருவன் நடக்க முடியாமல் நாற்காலியில் அமர்ந்திருந்த மூதாட்டியின் நிலைமையைக் கண்டு அவரது கால்களை உருவி விட்டு அதன் பின்னர் கொள்ளையர்கள் இருவரும் வீடு முழுவதும் சூறையாடி கொள்ளையிட்டுச் சென்றனர். இச்சம்பவம் நேற்று முன் தினம் இரவு 8.30 மணியளவில் ஜாலான் பெக்கான் ஆயர் பானாஸ், லாபீசிலுள்ள குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்ததாக சிகாமட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ராவுப் செலாமாட் தெரிவித்தார். இச்சம்பவத்தின் போது நரம்பு தளர்ச்சி நோயால் நடக்க முடியாமல் நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த 76 வயதுடைய மூதாட்டியின் நிலையைக் கண்ட இரண்டு கொள்ளையர்களிள் ஒருவன் அவரது இரு கால்களையும் உருவி விட்டு, வீட்டை சூரையாடினர். அப்போது வீட்டிலிருந்த ஹங்பாவ் பணம், இரண்டு கைப்பேசிகள், 5 ஆயிரம் வெள்ளி மதிப்புடைய மூன்று விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் போன்றவற்றை கொள்ளையிட்டு தப்பிச் சென்றதாக சூப்ரிண்டெண்டன் ராவுப் செலாமாட் தெரிவித்தார். இச்சம்பவம் நிகழ்ந்த போது மூதாட்டியின் கணவரும், ஒரு பேரப்பிள்ளையும் அருகிலுள்ள கடைக்குச் சென்றி ருந்தனர், இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் போலீசில் புகார் செய்ததாக அவர் சொன்னார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்