போதைப் பொருளுக்கு அடிமையான 12 வயது பள்ளி மாணவனை போலீசார் கைது செய்தனர்.நேற்றைய முன் தினம் பட்டர்வொர்த் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் இந்த கைது நடவடிக்கையை போலீசார் மேற் கொண்டனர். சுற்று வட்டார மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், தங்கும் விடுதி யிலிருந்து நால்வரை கைதுச் செய்தனர். பட்டர்வொர்த் பகுதியில் உள்ள சில மலிவு விலை தங்கும் விடுதியில் தவறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தபின் போலீசார் இந்த சோதனையை நடத்தினர். சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட போலீசார் 20 வயது ஆடவன், 12 வயதுடைய சிறுவன் ஓர் அறை யில் இருப்பதை கண்டனர், சந்தேகம் ஏற்படவே அவர்கள் இருவரையும் சிறுநீர் சோதனைக்கு உட்படுத்தினர். அதில், சிறுவன் உட்பட இருவரும் போதைப்பொருளை உட்கொண்டது தெரியவந்தது. மாணவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிறுவனின் விவரத்தை போலீசார் வெளியிடாத நிலையில், பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விட்டதாக நம்பப்படும் 12 வயது சிறுவன், கைதுச் செய்யப்பட்ட பிற இளை ஞர்களுடன் இணைந்து இத்தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று போலீஸ் தெரிவித்தது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்