மரணமடைந்த தடுப்புக் காவல் கைதி எஸ்.பாலமுருகனின் குடும்பத்தார் நேற்று இங்குள்ள புக்கிட் அமான் தலைமையகத்தில் எதிர்க்கட்சி தலைவர்களுடன் அணிவகுத்துச் சென்று மகஜர் ஒன்றை சமர்ப்பிக்க முற்பட்டனர். எனினும், போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் அங்கு இல்லாததால் சலசலப்பு ஏற்பட்டது. தடுப்புக்காவலில் இருந்த சமயம் மரணமடைந்த பாலமுருகனுக்கு நீதிக் கேட்டு போலீஸ் படைத் தலைவரிடம் மகஜர் சமர்ப்பிப்பதற்காக நேற்று காலை 11.20 மணிக்கு அவர்கள் அங்கு சென்றனர். எனினும், ஓர் இன்ஸ் பெக்டர் மட்டுமே தங்களை சந்தித்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பாலமுருகனின் மனைவியும் மகளும் அமைதி காத்த அதே சமயம், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா, பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தியென் சுவா, காப்பார் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.மாணிக்கவாசகம் ஆகியோர் தாங்கள் மூத்த அதிகாரியைப் பார்க்க வேண்டும் என கோரினர். சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டருடன் 15 நிமிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதும் டான்ஸ்ரீ காலிட்டை அவர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இது பெரிய அவமதிப்பாகும். ஓர் ஆடவர் இறந்துள்ளார். போலீஸ் காவலில் இருந்த சமயம் மரணமடைந்தோரில் இவர் 243-ஆவது நபர். அப்படி இருந்தும், எங்களை சந்திப்பதற்கு ஒரு மூத்த அதிகாரியை அவர்களால் அனுப்ப முடியவில்லை என்று மாணிக்கவாசகம் நிருபர்களிடம் கூறினார். எனினும், போலீஸ் படைத் தலைவர் செயலகத்தின் தொடர்பு பிரிவு தலைவர், துணை ஆணையர் டத்தின் அச்மாவாத்தி அஹ்மட் அத்தருணத்தில் அங்கு வந்ததும் மாணிக்கவாசகம் தனது பேச்சை நிறுத்திக்கொண்டார். தான் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததால் முன் கூட்டியே அங்கு வந்து அவர்களை சந்திக்க முடி யாததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். உடனே அவரிடம் மகஜர் சமர்ப்பிக்கப்பட்டது. பாலமுருகனின் மரணம் பற்றி விசாரிக்க சுயேச்சை குழு அவசியம் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மகஜரை நேரடியாக போலீஸ் படைத் தலைவரிடம் சமர்ப் பிக்கவிருப்பதாக அஸ்மாவாத்தி உறுதியளித்தார். வட கிள்ளான் போலீஸ் தலைமையகத்தில் காவலில் இருந்த சமயம் பாலமுருகன் (44) மரணமடைந்தார். இச்சம்பவத்திற்கு முதல் நாள்தான் அவர் கைது செய்யப்பட்டார். அன்று காலை தடுப்புக்காவல் உத்தரவு பெறு வதற்காக அவர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டபோது அவர் ரத்த வாந்தி எடுப்பதை கண் ணுற்ற மாஜிஸ்திரேட் அவரை விடுவித்து மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல உத்தரவிட்டார். எனினும், அவர் நேரே போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் மரணமடைந்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்