கொள்கலன் லோரியும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட கோர சாலை விபத்தில் இளைஞர் தலை நசுங்கி சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. நேற்று காலை 8.10 மணியளவில், சிரம்பான், ஜாலான் எல்பிஜே காடோங் கேஎல்ஐஏ விமான நிலையம் செல்லும் சாலையில் ஒரு கொள்கலன் லோரியும் இரு மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதாக மாவட்ட போலீஸ் பேச்சாளர் விளக்கினார். இந்த சாலை விபத்து சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த 22 வயது மலாய்க்கார இளைஞர் சாலை நடுவே தூக்கி வீசப்பட்டு தலையில் கடுமையான காயங்களுடன் பலியானதுடன் கவிழ்ந்த கொள்கலன் லோரியின் இடுகையில் இருகால்கள் சிக்கிய 33 வயது இந்திய ஆடவர் வெளியேற முடியாமல் போராடியதாக தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் லோரி டிரைவரை மீட்டு சிகிச்சைக்கு சிரம்பான் துவாங்கு ஜப்பார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கட்டுப்பாட்டை இழந்து கொள்கலன் லோரியில் மோதிய விபத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டியும் அவரது பின்னால் அமர்ந்து வந்த நபரும் சொற்ப காயங்களுடன் உயிர் தப்பியதாக போலீஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்