போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் வெ.2 கோடியே 16 லட்சத்தை மோசடி செய்த ஆப்பிரிக்கன் ஸ்கேம் கும்பலைச் சேர்ந்த 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிங்கப்பூர் வணிக குற்ற விசாரணை பிரிவுடன் இணைந்து புக்கிட் அமான் வணிக குற்ற விசாரணை பிரிவினர் இந்த சோதனையை மேற்கொண்டதாக அப்பிரிவின் இயக்குநர் டத்தோ ஏக்ரியல் சானி தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 13 ஆப்பிரிக்க ஆடவர்கள், 13 உள்நாட்டு பெண்கள், 7 சிங்கப்பூர் பெண்கள், இந்தோனேசிய பெண் ஆகிய அனைவரும் 22 முதல் 67 வயதுடையவர்கள் ஆவர்.இந்த சோதனை நடவடிக்கை இம்மாதம் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நெகிரி, பகாங், பினாங்கு, மலாக்கா, சரவா ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டன. இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் சிங்கப்பூரில் மட்டும் இதுவரையில் 43 மோசடி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். அங்கு கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில்தான் இந்த அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாக நேற்று புக்கிட் அமானில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தில் டத்தோ ஏக்ரியல் தெரிவித்தார். இந்த கைது நடவடிக்கையின் மூலம் 7 பல்வகை கார்கள், இரு தங்கச் சங்கலிகள், 26 வங்கி அட்டைகள், 39 கைப்பேசிகள், 13 மடிக்கணினிகள், வெ.19,690 ரொக்கம் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களுக்கு சொந்தமான இரு வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்பில் மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்