ஜொகூர் ம.இ.கா., கேலாங் பாத்தா தொகுதியுடன் இணைந்து இங்கு தாமான் முத்தியாரா ரினி ஊத்தான் பண்டாரில் ஏற்பாடு செய்திருந்த ஒற்றுமை பொங்கல் விழாவில் ஒரு அங்கமாக கேலாங் பாத்தா அழகு ராணிப் போட்டியும் நடைபெற்ற வேளையி?ல் போட்டியில் நிஷாந்தினி வெற்றிச் செல்வம் கேலாங் பாத்தா அழகு ராணியாக வாகை சூடப்பட்டார். மொத்தம் 19 பெண்கள் போட்டியில் பங்கு கொண்டதாக தெரிவித்த தொகுதி மகளிர் பிரிவின் தலைவி திருமதி இந்திரா வடிவேலு போட்டியில் இரண்டாவதாக சித்தி பாத்திமா அபுபாக்காரும் மூன்றாவதாக கோகிலா ராமனும் வாகை சூடியதாகவும் தெரிவித்தார். போட்டியில் வென்றவர்களுக்கு ரொக்கம் உட்பட கவர்ச்சியான பரிசுகளும் வழங்கப்பட்டதாக தெரிவித்த ஜொகூர் ம.இ.கா. மகளிர் துணைத் தலைவியுமான இந்திரா வடிவேலு சிறந்த நீதிபதிகளைக் கொண்டு அழகு ராணிகளை தேர்வு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்த அழகு ராணிப் போட்டிக்கு அதிக வரவேற்பு கிட்டியதால் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் போட்டி தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே கேலாங் பாத்தா அழகு ராணியாக வாகை சூடிய நிஷாந்தினி வெற்றிச் செல்வத்திற்கு தொகுதி தலைவர் எஸ்.கண்ணனின் துணைவியார் திருமதி கௌசல்யாவும் திருமதி இந்திரா வடிவேலுவும் மகுடம் சூட்டி கௌரவித்தனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்