நேற்று கார் கண்காட்சி விழா கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேகா சதுக்கத்தில் கோலா கலமாக நடந்தேறியது. காலை முதல் மாலை ஆறு மணி வரை நடைபெற்ற விழாவில் ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் கலந்து கொண்டு களிப்புற்றனர். பெர்சத்துவான் ஆட்டோ ஷோ மலேசியா (Persatuan Auto Show Malaysia)என்ற அமைப் பும் பிஎம்டபள்யூ டாக்டர் (BMW Doctor) என்ற அமைப்பும் இணைந்து இவ்விழாவிற்கு விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தனர். இக்கார் கண்காட்சி விழா விற்கு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான்காவது ஆண்டாக நடை பெற்ற கண்காட்சி விழாவில் 250 பல ரகக் கார்கள் பங்கேற் றன. பல விதத்தில் வடிவமைக் கப்பட்ட வாகனங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. கார் ஷோ என்ற கண்காட்சி யானது பங்கேற்பாளர்கள் மத்தியில் ஒரே உற்சாகத்தையும் குதூகலத்தையும் ஏற்படுத்தியது. கோலாலம்பூர் டத்தோ பண்டார் டத்தோஸ்ரீ ஹாஜி முகமட் அமின் நோர்டினும் மலே சிய நண்பன் நிர்வாக இயக்குநர் டத்தோ ஷாபி ஜமானும் இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவிற்கு சிறப்பு செய்தனர். கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட விழாவில் பல்வேறு போட்டிகளும் அதிர்ஷ்டக் குலுக்கலும் நடத்தப்பட்டது.வெற்றியாளர்களுக்கு டத்தோ பண்டாரும், டத்தோ ஷாபி ஜமானும் பரிசுகளை எடுத்து வழங்கி பங்கேற்பாளர்களை மகிழ்வித்தனர். இளைஞர்களுக்கு இதுபோன்ற கார் கண்காட்சி விழா ஏற்ற ஒன்று என்று தெரிவித்த டத்தோ பண்டார், ஓய்வு நேரத்தை ஆக்கரமாக பயன்படுத்துவதற்கு இதுபோன்ற விழா உறுதுணையாக இருக்கும் என்றார். இளைஞர்களுக்கு இது ஓர் உயிரோட்டமான விழா என்று டத்தோ ஷாபி ஜமான் வர்ணித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்