ரவாங் சாலையில் இரு கார்கள் மோதிக் கொண்டதில் ஒருவர் பலியான வேளையில் மூன்று குழந்தைகள் உட்பட 8 பேர் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்.இச்சம்பவம் நேற்று காலை 7 மணியளவில் ரவாங்கிலிருந்து பத்து அராங்கிற்கு செல்லும் சாலையின் 4ஆவது கிலோ மீட்டரில் (ரவாங் டோல் சாவடிக்கு அருகில்) நிகழ்ந்துள்ளது.புரோட்டோன் சாகா ரகக் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த 28 வயதுடைய பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் அதே காரில் பயணித்த 8 பேரும் பலத்த காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். அக்காரில் 17,14 வயதுடைய இளைஞர்கள், 11 வயதுடைய மூன்று பிள்ளைகள், ஆறு வயது குழந்தை ஆகியோரும் பயணித்துள்ளனர். விபத்துக்குள்ளானவர் சுங்கை பாகாவிலிருந்து தாமான் இந்தகிராசி ரவாங்கிற்கு பயணித்த வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் அலி அகமட் தெரிவித்தார். இவர்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது, எதிர் சாலையில் வந்த புரோட்டோன் பெர்சோனா ரகக் கார் கட்டுப்பாட்டை இழந்து இவர்களின் காருடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.இந்த விபத்தில் பலியானவர் பண்டார் தாசேக் புத்ரியை சேர்ந்தவராவார். அவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சுங்கை பூலோ மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நேருக்கு நேர் மோதிக் கொண்ட கார்களின் ஓட்டுநர் இருவருமே பலத்த காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் உட்பட காரில் பயணித்த அனைவரும் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளதாக அலி அகமட் சொன்னார். இதற்கிடையே சம்பவம் குறித்து காலை 7.11 மணியளவில் தகவல் கிடைத்ததும் ரவாங் தீயணைப்பு படைக் குழு அங்கு விரைந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்புப் படையின் துணை இயக்குநர் முகமட் சானி ஹாருல் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்