கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிம் தோங் ஹிம் மற்றும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சியை விட்டு விலகியது ஜசெகவிற்கு பேரிடியாக அமைந்துள்ளது. உட்கட்சி பூசல் பொங்கி வழியும் நேரத்தில் இத்தகைய விலகல் நடந்தேறியுள்ளது. பாச்சாங் சட்டமன்ற உறுப்பினர் லிம் ஜேக் வோங், கெசிடாங் சட்டமன்ற உறுப்பினர் சின் சூன் சியோங், டுயோங் சட்டமன்ற உறுப்பினர் தோ லியோவ் சான் ஆகியோர் நேற்று கூண்டோடு கட்சியினை விட்டு விலகினர். நாங்கள் நால்வரும் அவசரப்பட்டு, ஆவேசப்பட்டு எடுத்த முடிவு அல்ல இது என்கின்றனர் இவர்கள். ஆற அமர ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவு. அதோடு மிக வருத்ததுடன் நாங்கள் இம்முடிவினை எடுத்துள்ளோம். லிம் குவான் எங்கும் அவரின் தேசியத் தலைமைத்துவமும் கட்சியின் உள் விவகாரங்களையும் வெளிவிவகாரங்களையும் கையாளும் முறை குறித்து தான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாக கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிம் தோங் ஹிம் தெரிவித்தார். தான் கட்சியின் மீது நம்பிக்கை இழந்து விட்டதாகவும் இவர் குறிப்பிட்டார். அண்மையக் காலமாக ஜசெக அணுசரித்து வரும் புதிய அரசியல் உறவு முறையினை நான் ஏற்றுக் கொள்வதாக இல்லை. இவ்வாறு சிம் ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். கட்சி தனது ஆரம்பகால லட்சியங்களிலிருந்து தடம் மாறியுள்ளது. இது குறித்து இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மூவர் ஏமாற்றம் தெரிவித்தனர். வேறு அரசியல் கட்சியில் சேரும் நோக்கம் இவர்களுக்கு இல்லை. அடுத்த பொதுத் தேர்தலில் இவர்கள் அநேகமாக சுயேச்சை வேட்பாளராக நிற்கலாம்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்