தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட எஸ். பாலமுருகனின் மரணத்தின் மர்மத்திற்கு இன்னும் விடை கிடைக்காத சூழலில், ஒரு சிறைக்கைதியான சந்திரன் முனியாண்டி மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றச்செயலுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு,தற்போது மிகவும் கவலைக்கிடமான நிலையில் செபெ ராங் ஜெயா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது மகனுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிய விரும்புகிறார் ஒரு தாய். கடந்த ஜனவரி 20-ஆம் தேதி என் மகன் ஜாவியில் உள்ள சிறைச்சாலைக்குள் நுழையும்போது ஆகக்கடைசியாக நான் பார்த்தேன். ஆரோக்கியமாகத்தான் இருந்தான் என்று தனது 42 வயது மகன் சந்திரன் முனியாண்டி குறித்து கண்ணீர் மல்கக் கூறினார் பி.பேச்சாயி (59). பிப்ரவரி 8-ஆம் தேதி இரவு அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. மறுநாள் மருத்துவமனையில் அவனை பார்த்தபோது அவனது நிலை கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன் என்றார் அந்தத் தாய். சந்திரனின் தலை, நெற்றி, கால்களில் ஆழமான காயங்கள் காணப்பட்டன. அது மட்டுமல்ல அவனது கால் நகங்கள் பிடுங்கப்பட்டுள்ளன. சந்திரனின் மண்டை ஓடு நொறுங்கியிருப்பதற்கான அடை யாளங்கள் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். பிப்ரவரி 10-ஆம் தேதி சிறைச்சாலை அதிகாரிகளிடம் நான் இது பற்றி விளக்கம் கேட்டபோது அவை என் மகன் சுயமாக ஏற்படுத்திக்கொண்ட காயங்கள் என்று அவர்கள் கூறினர். நான் அவனின் தாய். என் மகனைப் பற்றி எனக்கு தெரியும். அதன் பிறகு நான் போலீசில் இது பற்றி புகார் செய்தேன் என்று பேச்சாயி மேலும் கூறினார்.பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் பி.ராமசாமி நேற்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் பேச்சாயி இவ்விவரங்களை வெளியிட்டார். வலியே உணர முடியாத அளவிற்கு இருந்திருந்தால் மட்டுமே சந்திரனால் தானாகவே சொந்தமாக கால் நகங்களை பிடுங்கியிருக்க முடியும் என்று ராமசாமி கூறினார். கைகலப்பில் ஈடுபட்ட காரணத்திற்காக சந்திரனுக்கு கடந்த ஜனவரி மாதம் ஆறு மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. பினாங்கு, கம்போங் சுங்கை ஜாவியில் ஒரு சாமானிய தொழிலாளியாக அவர் தனது காலத்தை கடத்தினார். அவருக்கு மனைவியும் ஒரு பிள்ளையும் உள்ளன. சந்திரனின் இந்த நிலைமைக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று ராமசாமி வலியுறுத்தினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்