மலாக்காவில் டிஏபி சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் அக்கட்சியிலிருந்து விலகிக் கொண்டிருப்பதாக ஓரியெண்டல் டெய்லி ஆன்லைன் இன்று அறிவித்தது. கோட்டா மலாக்கா எம்பி சிம் தோங் ஹிம், டுயோங் சட்டமன்ற உறுப்பினர் கோ லியோங் சான், பாச்சாங் சட்டமன்ற உறுப்பினர் லிம் ஜாக் வொங், கெசிடாங் சட்டமன்ற உறுப்பினர் சின் சூங் சியோங் ஆகிய அந்நால்வரும் இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் தங்கள் முடிவை அறிவித்ததாகக் கூறப்பட்டது. ஓரியெண்டல் டெய்லியின் செய்தியுடன் செய்தியாளர் கூட்டத்தின் காணொளி ஒன்றும் இணைக்கப் பட்டிருந்தது. தங்கள் முடிவு உடனடியாக நடப்புக்கு வருவதாகத் தெரிவித்த அந்நால்வரும், டிஏபி அதன் தொடக்கக் காலக் குறிக்கோளைவிட்டு விலகிச் சென்றுவிட்டதாகவும் அதுவே தங்கள் முடிவுக்குக் காரணம் என்றும் கூறினர். அவர்களின் விலகலால் மலாக்காவில் இப்போது டிஏபிக்கு மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். எம்பி எவரும் இலர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்