முன்னாள் பிரதமரும், பிரிபூமி கட்சித் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் முகமட்டும் பி.கே.ஆர் கட்சியின் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் இரண்டாவது முறையாக நேற்று சந்தித்துப் பேசினர். அவதூறு வழக்கு தொடர்பில் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்ட டத்தோஸ்ரீ அன்வாரிடம், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் சுமார் 40 நிமிடம் பேசினார். இச்சந்திப்பின் போது, துன் டாக்டர் மகாதீர், பெரிபூமி கட்சி பக்காத்தான் ஹாராப்பானுடன் கூட்டணி வைத்துக்கொள்வது குறித்து பேச்சு வார்த்தை நடத்தியதாகத் தெரிவித்தார். ‘நாங்கள் நாட்டில் நிலவும் அரசியல் விவகாரம் குறித்தும் பேசினோம். நாங்கள் இருவரும் பல விவகாரங்களில் ஒரே கருத்தைக் கொண்டிருக்கிறோம் ’ என துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, ஏறக்குறைய முற்பகல் 11.55 மணிக்குத் தமது ஆதரவாளர்களுடன் நீதிமன்றத்திற்கு வருகைப் புரிந்த துன் டாக்டர் மகாதீர், பொது மக்கள் அமரும் இடத்தில் முதல் வரிசையில் சென்று அமர்ந்தார். அப்போது அவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை நோக்கி கையசைத்த போது, அன்வாரும் அதனை ஆமோதிக்கும் வகையில் தலையசைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது ஓரினப்புணர்ச்சி வழக்கில் ஐந்தாண்டு சிறைதண்டனை அனுபவித்து வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை, நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது, முன்னாள் பிரதமர் மகாதீர் சந்தித்துப் பேசுவது இது, இரண்டாவது முறையாகும்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்