img
img

பேரா மாநில மஇகா கவலைக்கிடம்!
வெள்ளி 10 பிப்ரவரி 2017 15:39:32

img

மலேசியாவில் 70 ஆண்டுகால பாரம்பரியத்தினைக் கொண்டிருக்கும் ஒரே இந்தியர் கட்சியான மஇகா பேரா மாநிலத்தில் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக பெருவாரி யான இந்திய வாக்காளர்கள் மலேசிய நண்பனைத் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர். பேரா மாநில இந்தியர்களின் தேவைகள் முழுமையாக முட மாக்கப்பட்டுள்ளதாகவே பெரும்பாலோர் தெரிவித்துள் ளனர். நண்பன் குழு பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பேரா மாநில மஇகாவின் தலை மைத்துவம் மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதைக் கடந்த இரண்டு பொதுத் தேர்தல் முடிவுகள் மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளதை உணராமல் இன்று வரையிலும் எவ்விதமான உருமாற்றமும் இல்லாமல் செயல்பட்டு வருவதால் பேரா மாநில இந்தியர்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதை யாராவது மறுக்க முடியுமா? பேரா மாநில மஇகாவின் தலைமைத்துவத்தின் பலவீனத்தால் நாட்டின் 13ஆவது பொதுத் தேர்தலின்போது இந்திய வாக்காளர்களை அதிகமாகக் கொண்டிருந்த பேராங் தொகுதியையும், சுங்கை சட்ட மன்றத் தொகுதியையும் மஇகா விட்டுக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் நிகரான மாற்று சட்டமன்றத் தொகுதிகளையும் கேட்டுப் பெறுவதற்கு வக்கில்லாமல் போட்டியிட்ட மூன்று சட்டமன்றத் தொகுதி களான; * ஜெலாப்பாங் சட்டமன்றத் தொகுதி * புந்தோங் சட்டமன்றத் தொகுதி * ஊத்தான் மெலிந்தான் சட்டமன்றத் தொகுதி ஆகிய மூன்று தொகுதிகளிலும் நிறுத்தப்பட்ட மஇகாவின் சார்பிலான வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியதற்கு பேரா மாநில மஇகாவின் பலவீனமே என்பதை அறிந்திருந்தும் இன்றுவரை எவ்விதமான மாற்றங்களையும் ஏற்படுத்தாமல் மௌனமாக இருந்து வருவது தேசிய முன்னணிக்கு மிகப் பெரிய சவாலினை ஏற்படுத்திவிடும் என நண்பன் குழு எச்சரிக்கின்றது. சாகும்வரை பதவிகளா? 70 ஆண்டுகள் பாரம்பரியக் கட்சியாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் பேரா மாநில நிலையில் இன்னமும் 70 வயதைக் கடந்தவர்களின் பதவி ஆதிக்கம் மிகப்பெரிய பின்னடைவினையே ஏற்படுத்தி வருவதை உணர்ந்திருந்தும் எதுவுமே செய்ய முடியாமல் இருந்து வரும் பேரா மாநில மஇகாவின் தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ இளங்கோவின் நடவடிக்கை மஇகாவினை மேலும் பலவீனப்படுத்தியுள்ள தோடு அவசரப் பிரிவில் சிகிச்சைப் பெற வேண்டிய அவசியம் இருப்பதாகவே நண்பனைத் தொடர்பு கொண்ட பெரும்பாலோர் தெரிவித்துள்ளனர். பேரா மாநிலத்தில் இரண்டு சட்டமன்றங்களைக் கொண்டிருந்த மஇகா தொகுதித் தலைவராக 42 ஆண்டுகளாகத் தலைமைப் பொறுப்பினை ஏற்றிருப்பது உலகில் வேறு எங்குமே நடக்காத நிகழ்வாக நண்பன் குழு கருதுகின்றது. * கிராமத் தலைவர்களின் நியமனங்களில் சுயநலப் போக்கு * மாவட்ட மன்ற உறுப்பினர்களின் நியமனத்தில் சுயநலப் போக்கு * இனம் சார்ந்த நிலையிலான அனுகூலங்கள். * மக்களின் நலன்களை துளியளவும் கருத்தில் கொள்ளாத நிலை என மஇகாவின் மீதான எதிர்ப்புணர்வினை ஏற்படுத்தியுள்ளதை டத்தோ இளங்கோவினால் எதையுமே செய்ய முடியவில்லை என்பது வேதனையான விவகாரமாகும்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img