இரண்டு வாகனங் கள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோதிக் கொண்ட கோர சாலை விபத்தில் 2 ஆடவர்கள் மரணமடைந்ததுடன் 4 பேர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை 8.10 மணியளவில் சிரம்பான், ஜாலான் கோலப்பிலா, புக்கிட் புத்துஸ் எனப்படும் இடத்தில் மைவி காரும் பெரோடுவா கெலிசா காரும் மோதி விபத்துக்குள்ளானதாக மாவட்ட போலீஸ் பேச்சாளர் கூறினார். இவ்விபத்து சம்பவத்தில் இரு வாகனங்களும் இரண்டு துண்டுகளாக சிதறியதில் 2 ஆடவர்கள் சம்பவம் நடந்த இடத்திலேயே மரணமடைந்ததுடன் மற்ற 4 பேர் காரினுள் சிக்கிக் கொண்டனர். தகவல் கிடைத்ததும் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் கார்களுக்கிடையே சிக்கிய ஒரு ஆடவர் உட்பட 3 பெண்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு சிரம்பான் துவாங்கு ஜப்பார் மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கெலிசா காரில் கோலப்பிலாவிலுள்ள உறவினர் வீட்டிற்குச் செல்லும் வழியில் நிகழ்ந்த இவ்விபத்தில் மரணமடைந்த ஷாருல்நிசம் அபுஹசான் (வயது 39), ஜாஹாரி மாசோர் (வயது 32) ஆகிய இருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்