img
img

இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான ரிம. 10 லட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளதா?
புதன் 08 பிப்ரவரி 2017 13:45:32

img

* மாநில பட்ஜெட்டின் வழியாக பெற்றுள்ள மானியத்தினை யார் நிர்வாகம் செய்வது? * பயன்பெறும் மாணவர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்? * ஆண்டுக்கு எத்தனை மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்? * மஇகாவின் பயன்பாட்டிற்கு மானியங்கள் மாற்றிவிடப்பட்டுள்ளதா? * மாநில அரசாங்கத்தின் மானியங்கள் தேவைகளை நிறைவே செய்யாதா? மலேசிய இந்தியர்களைப் பொறுத்தவரை தேசிய அரசாங்கமோ அல்லது மாநில அரசாங்கங்களோ இந்திய வாக்காளர்களின் தேவைகளைப் புறந்தள்ளியதே இல்லை என்பதாகவே ஏவுகணை கருதுகின்றது. கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாளருக்கு உடைத்த கதையாகவும், பூசாரி வரம் கொடுத்தாலும் சாமி வரம் கொடுக்காத 70 ஆண்டுகள் சாபமும் இன்னமும் விடாத கருப்பாக துரத்தி வருவதை பேரா மாநில அரசாங்கம் ஆண்டுதோறும் மாநில பட்ஜெட்டின் வழி வழங்கி வரும் இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான சிறப்பு நிதியான ரிம. 10 லட்சம் தொகையின் பயனில்லாத பயன்பாடும் நிச்சயமாக உணர்த்துவதாக ஏவுகணை கருதுகின்றது. சிலாங்கூர் மாநில ஆட்சியையும் பினாங்கு மாநில ஆட்சியையும் எதிர்க்கட்சியான மக்கள் கூட்டணி அரசாங்கம் வழி நடத்தியதன் பலனாக அம்மாநிலங்களின் தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காக ஆண்டு தோறும் பட்ஜெட்டின் வழி முறையே ரிம. 4 மில்லியன், ரிம 1.75 மில்லியன் தொகையினை வழங்கியதன் எதிரொலி தேசிய முன்னணி ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் பட்டதன் விளைவால் பேரா மாநிலம் இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு ரிம. 1 கோடியும் தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ரிம 500,000மும் ஒதுக்கியிருந்தாலும் மேற்கண்ட நிதி முழுமையான பயனைத் தந்துள்ளதா? எனும் கேள்விக்கு நிச்சயமாக யாருமே பதில் தரப் போவதில்லை என்பதாகவே ஏவுகணை கணிக்கின்றது. கல்வி மேம்பாட்டிற்கான மானியம் எங்கே? பேரா மாநில இந்தியர்களைப் பொறுத்தவரையில் இன்னமும் தேசிய முன்னணியின் நிரந்தரமான வாக்காளர்களாக இருந்து வரும் பட்சத்தில் அவர்களின் பிள்ளைகளின் எதிர்கால கல்வி தேவைகளை நிறைவு செய்ய வேண்டிய ரிம 10 லட்சம் மானியத் தொகை சரியான இலக்கினை அடைந்துள்ளதா? என்பதே இன்றைய கேள்வியாகும்! பேரா மாநிலத்தின் மந்திரிபுசார் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ரி அப்துல் காடீர் இந்தியர்களின் மீது கொண்டுள்ள அன்பின் விளைவால் வழங்கியிருந்த ரிம 10 லட்சம் மானியத்தினை; * முழுமையான பொறுப்பேற்று நிர்வாகம் செய்வது யார்? * இந்திய மாணவர்களின் எவ்வாறான கல்வி தேவைகளுக்கும் மானியம் வழங்கப்படுகின்றது? * ஒவ்வோராண்டும் இத்திட் டத்தின் வழி பயன்பெற்றுள்ள மாணவர்கள் எத்தனை பேர்? * இம்மானியத்தின் வழி உபகாரச் சம்பளம் பெற்றுள்ள பேரா மாநில இந்திய மாணவர்கள் எத்தனை பேர்? * இந்திய மாணவர்களின் கல்வி தேவைகளை நிறைவு செய்ய வேண்டிய மானியம் பிற கல்வி நிலையங்களுக்குத் தாரை வார்க்கப்படுகின்றதா? * பேரா மாநிலம் தழுவிய நிலையில் ஏழ்மை நிலையில் வாழும் குடும்பத்தாரின் கல்வி தேவைகளை இம்மானியம் நிறைவு செய்துள்ளதா? போன்ற கேள்விகளுக்கு பேரா மாநில மஇகாவின் தொடர்புக் குழுத் தலைவராக நியமனம் பெற்றிருக்கும் டத்தோ இளங்கோ முறையாகவும் தெளிவாகவும் பதிலளிக்க வேண்டிய கடப்பாடு இருப்பதை மறுக்காமல் பேரா மாநில இந்தியர்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என ஏவுகணை கேட்டுக் கொள்கின்றது! இந்தியர்கள் ஏமாந்த சோனகிரிகள்தானா? ஏவுகணையைப் பொறுத்தமட்டில் எல்லாவிதமான அரசாங்க மானியங்களும் 'கைக்கு எட்டியது வாயிற்கு எட்டாத' நிலையைத்தான் இன்றுவரை அனுபவித்து வருகின்றோம். பேரா மாநில அரசாங்கம் வழங்கி வரும் இந்திய மாணவர்களுக்கான சிறப்பு கல்வி மேம்பாட்டு மானியம் ரிம 10 லட்சம் தொடர்பான விவரங்கள் எந்த வகையான தகவல் ஊடகங்களின் மூலமாகவும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதை தயவு செய்து பொறுப்பில் உள்ளவர்கள் அடையாளம் காட்ட வேண்டும் என ஏவுகணை கேட்டுக் கொள்கின்றது. பேரா மாநில அரசாங்கம் இந்தியர்களுக்கு வழங்கியிருக்கும் சிறப்பு நிதி தொடர்பான விவரங்கள்; * தமிழ்ப் பத்திரிகைகளின் வழியாக * வானொலி நிலையங்களின் மூலமாக * மின்னியல் ஊடகங்களின் வாயிலாக * சமூக ஊடகங்களின் சேவைகளின் வழியாக வழங்கப்பட்டுள்ளதா? என்பதை நிச்சயமாக அறிவிக்க வேண்டும்! அரசாங்கம் வழங்கி வரும் அனைத்து வகையான திட்டங்கள் மற்றும் மானிய ஒதுக்கீடுகள் அனைத்தும் இந்தியர்களைப் பொறுத்தவரையில் இலவு காத்த கிளியாகிய கதைதான் என்பதை ஏவுகணை விவரிக்க விரும்பவில்லை. விளக்கத்தையும் பதிலையும் மாநில மஇகா தருமா? பேரா மாநில அரசாங்கம் இதுவரையிலும் மாநில இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக ரிம 5 மில்லியனுக்கும் (ரிம 50 லட்சம்) குறையாத மானியங்களை இதுவரையிலும் வழங்கியிருக்கலாம் என்பதன் அடிப்படையில் பேரா மாநில மஇகாவின் தொடர்புக் குழுத் தலைவர் 'மௌன சாமி'யாக இல்லாமல் ஏவுகணையின் கேள்விகளுக்கு நிறைவான பதிலைத் தர வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம். இல்லாதவர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டிய மானியத்தினை 'இருப்பவர்கள்' திசைமாற்றி விடுவதை முழுவதுமாக நிறுத்த வேண்டிய செயல்பாடுகளை பேரா மாநில இந்திய வாக்காளர்கள் மேற்கொள்ளாவிட்டால் இனி வரப் போகும் மானியங்களையும் இழந்துவிட வேண்டிய சூழல் உருவாகலாம் என எச்சரித்து ஏவுகணை விடைபெறுகின்றது!

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img