மகளிர் சட்டம் குறித்த அலசல்- வழக்கறிஞர் குணமலர் ரெ.கோ.ராசு ஏன் என்று கேட்க ஆளில்லை; சமநீதி கேட்கின்ற சட்டங்கள் ஏனில்லை என விரக்தியில் கணவர் கொடுக்கும் அறைகளை வாங்கிக் கொண்டு வீட்டு மூலையில் முடங்கி வாழ்க்கையை நகர்த்தும் மகளிரை இன்றும் நம்மால் காண முடிகிறது. காலம் எவ்வளவு மாறிக்கொண்டே சென்றாலும் மகளிர் சமுதாயம் எவ்வளவு உயரத்திற்குத்தான் முன்னேறிக் கொண்டிருந்தாலும் இன்றும் பல குடும்பங்களில் மகளிரின் மௌனமான அழுகை ஓசைகள் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. குடும்பங்களில் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தட்டிக் கேட்க மூன்றாவது ஆள்துணை தேவையில்லை. சட்டங்களின் அடிப்படையில் தங்களைப் பாதுகாக்க சில வளையங்கள் உள்ளன என்பதை இன்றைய மகளிர் முதலில் உணர வேண்டும் என வழக்கறிஞர் குணமலர் ரெ.கோ.ராசு தெரிவித்தார். இன்றைய கால கட்டத்தில் மகளிரைப் பாதுகாக்கும் சட்டங்கள் மற்றும் அவர்களிடையே உள்ள சட்ட விழிப்புணர்வு ஆகியவற்றைக் குறித்து மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மகளிருக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய குற்றமாகக் கற்பழிப்பு இன்றைய மகளிர் நன்கு அறிந்து வைத்துள்ளதோடு அந்தக் கொடுமைக்கு எதிரான நடவடிக்கைகளிலும் துணிந்து இறங்கிச் செயல்படத் தொடங்கிவிட்டனர். ஆனால், இதற்கு அப்பாற்பட்ட நிலையில் குடும்பங்களில் இழைக்கப்படும் கொடுமைகளும் அநீதிகளும் பெரும்பாலும் வீட்டின் வாசற்படியைத் தாண்டுவதில்லை. பாதிக்கப்பட்ட பெண்களும் தங்களின் குடும்ப நலனையும் எதிர்கால வாழ்வையும் கருத்தில் கொண்டு வாய்மூடி மௌனிகளாக சேலை தலைப்பில் துன்பங்களைத் துடைத்துவிட்டு வாழ்க்கையை நகர்த்தத் தொடங்கி விடுகின்றனர். ஆனால், குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், குடும்ப வன்முறைச் சட்டம் 1994க்குக் கீழ் பாதுகாக்கப்படுகின்றனர். வாழ்க்கைத் துணையால் ஒரு பெண் உளவியல் அல்லது உடலியல் அடிப்படையில் பினல் கோட் கீழ் சம்பந்தப்பட்டவருக்குத் தண்டனை வழங்க முடியும். மேலும், தனக்கு இழைக்கப்படும் கொடுமையைக் குறித்து சம்பந்தப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்தால் அவருக்கு ஐபிஓ-படி (இடைக்காலப் பாதுகாப்பு உத்தரவு) பாதுகாப்பு வழங்கப்படும். இதன்படி, சம்பந்தப்பட்ட பெண்ணின் பாதுகாப்பின் பொருட்டு அவர் வசிக்கும் இடத்திலிருந்து குறிப்பிட்ட தூரம் வரையில் அவரின் வாழ்க்கைத் துணை நுழைய முடியாது. தற்போது புதிதாக வந்துள்ள செக்ஷன்ஸ் 326 ஏ பினல் கோட்படி குடும்பப் பிரச்சினையில் பெண்ணுக்குக் காயம் ஏற்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பினல் கோட்படி வழங்கப்படும் தண்டனையை விட இரு மடங்கு தண்டனை விதிக்கப்படும். உதாரணத்திற்கு, ஒருவரை அறைந்து அவருக்குக் காயம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவருக்குச் அதிகபட்சம் ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது வெ.2,000 அபாராதம் விதிக்கப்படும். இதே பிரச்சினை கணவன் மனைவிக்கும் நடந்தால், குறைந்தபட்சமாகப் பெண்ணின் கன்னத்தில் அறைந்தால், செக்ஷன்ஸ் 323 பினல் கோட்படி துணைவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். செக்ஷன்ஸ் 375 ஏ என்னும் புதிய பினல் கோட்படியும் மனைவியின் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி தாம்பத்திய உறவுகொள்ள முற்பட்டலோ இதனை வைத்து அவருக்கு உளவியல் மற்றும் உடலியல் அடிப்படையில் காயங்களை ஏற்படுத்தினால் சம்பந்தப்பட்டவரைக் கைது ஆணையின்றி கைது செய்ய முடியும். குடும்பத்திற்கு அடுத்த நிலையில் பெண்கள் அதிக பாலியல் தொந்தரவுகளை ஏதிர்நோக்குவது அவர் பணி செய்யும் இடங்களில்தான். வேலையிடங்களிலான பாலியல் தொந்தரவுகள் இரு வகைப்படும். ஒன்று, சம்பளம் அல்லது பதவி உயர்வு என ஏதோ ஓர் எதிர்பார்ப்பின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் மேலாதிகரிகள் ஏற்படுத்தும் பாலியல் தொந்தரவுகள். இன்னொன்று, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி நடக்கும் பாலியல் தொந்தரவுகள். ஆனால், எந்த வகையான பாலியல் தொந்தரவுகளாக இருந்தாலும் சரி, தவறான சைகைகளின் வழி மன உளைச்சலை ஏற்படுத்துவது, தவறான குறுந்தகவல்களை அனுப்புவது போன்ற பாலியல் தொந்தரவுகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்க சட்டத்தில் வழியுண்டு. இன்னும் எளிமையாகச் சொன்னால், விசில் அடித்து பாலியல் தொந்தரவு ஏற்படுத்தினால் கூட சம்பந்தப்பட்டவரைத் தண்டிக்க சட்டத்தில் இடமுண்டு. எடுத்துக்காட்டிற்கு, ஓர் ஆண் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் ஆபாசப் பாடலைப் பாடி பாலியல் தொந்தரவை ஏற்படுத்தினால் அந்த ஆடவருக்கு 3 மாத சிறைத் தண்டனை அல்லது குறிப்பிட்ட தொகை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும். இது போன்று சட்டங்களின் அடிப்படையில் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுத்தான் வருகிறது. ஆனால், அவர்கள் சட்டத்தைத் தங்களின் வாழ்க்கையிலிருந்து நகர்த்தி வைத்துப் பார்க்கிறார்கள். குறிப்பாக, நமது இந்திய சமுதாயத்தில் குடும்ப வன்முறைகள் அதிகம் நிகழ்ந்து கொண்டிருந்தாலும் அவற்றைத் திரை மறைவில் மூடி மறைக்கத்தான் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றனவே தவிர பாதிக்கப்பட்ட பெண்ணுக்குச் சட்ட அடிப்படையில் நியாயமோ பாதுகாப்போ வழங்கப்படவில்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். பெற்றெடுத்த தாய்தந்தையர், கட்டிய கணவர், இவர்களுக்கு அடுத்த நிலையில் தங்களைப் பாதுகாக்கும் கேடயங்களாகச் சட்டங்கள் உள்ளன என்பதை உணர வேண்டும். மேலும், இது குறித்த சட்ட விழிப்புணர்வு பள்ளியளவில் எளிமையான முறையில் ஏற்படுத்தினால் வளரும் மகளிர் சமுதாயத்திற்கு மிகப் பெரிய பாதுகாப்பு வளையத்தை உருவாக்க முடியும் என குணமலர் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்