img
img

தைப்பூச உச்சத்தில் பத்துமலை!
திங்கள் 06 பிப்ரவரி 2017 15:34:29

img

தைப்பூச விழாவை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு நேர்த்திக் கடனை செலுத்த 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று பத்துமலையில் திரண்டனர்.உலக முழுவதும் இருக்கும் முருகன் ஆலயங்களில் பிப்ரவரி 9ஆம் தேதி தைப்பூச விழா கோலாகலமாக கொண்டாடப் படவுள்ளது. மலேசியாவின் தாய்க் கோயிலாக விளங்கும் பத்துமலையில் பக்தர்கள் முன்கூட்டியே தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தத் தொடங்கி விட்டனர். ஜனவரி 14ஆம் தேதி தை மாதம் தொடங்கியது முதல் பக்தர்கள் பத்துமலையில் திரண்டு தங்களின் நேரத்திக்கடனை செலுத்தினர். இவ்வேளையில் நேற்று காலையில் மட்டும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பத்துமலையில் திரண்டனர். ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் கணக்கெடுப்பின் அடிப்படையில் சுமார் 10 ஆயிரம் பேர் நேற்று பால் குடம் ஏந்திச் சென்று முருகனுக்கு காணிக்கை செலுத்தினர். மேலும் காவடி எடுத்து வந்தும், முடி காணிக்கை செய்தும், கரும்பு தொட்டில் ஏந்தியும் பக்தர்கள் முருகப் பெருமானுக்கு நேர்த்திக் கடனை செலுத்தினர். ஆக மொத்தத்தில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பத்துமலையில் திரண்டனர் என்று கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை மாலையில் மேலும் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.தைப்பூசத்திற்கு இன்னும் மூன்று நாட்கள் எஞ்சியிருக்கும் வேலையில் பக்தர்கள் தொடர்ந்து பத்துமலையில் திரள்வார்கள் என கூறப்படுகிறது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img