தலைநகரை உலுக்கிய மூன்று கொலைச் சம்பவங்களில் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் டத்தோ அந்தஸ்தைக் கொண்ட ஓர் அரசியல் வாதி உட்பட குண்டர் கும்பலைச் சேர்ந்த 34 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் தலைநகரில் பல்வேறு பகுதிகளில் குண்டர் கும்பல், சூதாட்டம், பாலியல் ஒழிப்பு பிரிவின் சிறப்பு குழுவினர் (ஸ்தாக்) நடத்திய சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தேசிய போலீஸ் படையின் துணைத் தலைவர் டான்ஸ்ரீ நோர் ரசிட் இப்ராஹிம் தெரிவித்தார். இந்த கைது நடவடிக்கையின் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் நிகழ்ந்த பல்வேறு கொலைச் சம்பவங்களுக்கு தீர்வு கிடைக்கலாம் என தாம் நம்புவதாக அவர் கூறினார். கடந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி ஜிஞ்சாங்கில் சூரியா என்பவரையும் ஜூலை மாதம் 27ஆம் தேதி அவரின் நண்பர் கண்ணாவை டானாவ் கோத்தாவில் கொலை செய்த சம்பவத்திலும் இவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 6 துப்பாக்கிகள், ரைபிள், தோட்டாக்கள் உட்பட 10 கிலோ கிராம் போதைப்பொருளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி புத்ராஜெயாவிலுள்ள லேபோ செந்தோசா சமிக்ஞை விளக்கின் அருகில் சுங்கத் துறையின் துணை இயக்குநர் டத்தோ ஷாஹருடின் இப்ராஹிம் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதே குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் இந்த கொலைச் சம்பவத்திலும் ஈடுபட்டிருக்கலாம் என நம்புவதாக நோர் ரசிட் தெரிவித்தார். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிக்கும் இச்சம்பவத்திற்கும் சம்பந்தம் உள்ளது எனவும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் போலீஸ் துரித சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. சம்பந்தப்பட்ட குண்டர் கும்பலைச் சேர்ந்த மற்றவர்களுக்கு போலீஸ் வலை வீசி வருவதாக அவர் சொன்னார். தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஓப்ஸ் சந்தாஸ் ஹாஸ் நடவடிக்கை வடக்கு, தெற்கு உட்பட தலைநகரில் செயல்பட்டு வரும் குண்டர் கும்பல்களை குறி வைத்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டில் நிகழும் குற்றச் செயல்களை குறைக்க போலீசாரால் கைது செய்யப்படும் குண்டர் கும்பலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். டத்தோ உட்பட 34 பேர் கைது செய்யப்பட்டது இந்த அதிரடி நடவடிக்கையின் ஆரம்பம்தான். இதன் துரித நடவடிக்கை தொடரும் எனவும் இங்குள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் நிகழ்ந்த செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் நோர் ரசிட் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்