அந்நிய நாடுகளில் வாழும் இந்திய நிபுணர்கள், திறன்மிக்க தொழிலாளர்கள், தொழில் முனைவர்கள் ஆகியோரை மலேசியாவிற்குள் ஈர்க்கும் ஒரு நடவடிக்கையில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி நேற்று அறிவித்தார். தங்கள் நாட்டிற்கு வெளியே பணியாற்றும் இந்திய பிரஜைகளுக்கான விசா தேவையை அகற்றும் அமைச்சரவையின் முடிவுக்கு ஏற்ப இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், கட்டாரில் மட்டும் அதன் 23 லட்சம் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களில் 500,000 பேர் இந்திய பிரஜைகளாக இருக்கின்றனர் என்றும் அவர் சொன்னார். கட்டாரிலிருந்து மலேசியாவிற்கு நேரடி விமான சேவைகள் அதிகமாக மேற்கொள்ளப்படுவதால் புலம்பெயர்ந்த இந்தியர்களைக் கவருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன என்றார் அவர். கட்டார் மற்றும் மத்திய கிழக்கிலிருந்து அதிகமான சுற்றுப்பயணிகளை மலேசியாவிற்குள் கவரும் முயற்சிகளை மலேசியா தற்போது தீவிரப்படுத்தி வருகிறது. காரணம், கடந்த ஈராண்டுகளில் இங்கிருந்து வரும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று ஜாஹிட் சுட்டிக்காட்டினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்