மலேசிய இந்தியர்களின் நலன் காப்பதற்காக, பிரதமர் இலாகாவின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமலாக்கப் பிரிவினை (SITF) மறுஆய்வு செய்யும் அவசியம் ஏற்பட்டுள் ளது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும், 2020 தூர நோக்கு இலக்கை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில், மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணும் அதிரடி நடவடிக்கையில் இறங்க வேண்டிய தருணம் வந்து விட்டது என்றும் அவர்கள் கூறுகின்றனர். அனைத்து நிலைகளிலும் மலேசிய இந்தியர்களின் பிரச்சினைகளை கண்டறிந்து, தீர்வு காண்பது, மலேசிய இந்தியர்களுக்கு ஒரு சரியான, நியாயமான, சமமான வகையில் அரசாங்கத்தின் சேவைகளும்,திட்டங்களும் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்தில் கடந்த 2010 ஜூன் மாதம் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் இலாகாவின் கீழ் இந்த சிறப்புப் பிரிவு (எஸ்.ஐ.டி.எஃப் - SITF) தோற்றுவிக்கப்பட்டது. இதன் கீழ், இந்நாட்டு இந்தியர்களின் குடியுரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் 2011-ஆம் ஆண்டில் நாடு தழுவிய நிலையில் மை டஃப்தார் இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. எனினும், பெரும்பாலும் வர்த்தகம் தொடர்பான திட்டங்களிலும் பயிற்சிகளிலுமே இச்சிறப்புப் பிரிவு கவனம் செலுத்தி வந்துள்ளதே தவிர, மலேசிய இந்தியர்கள் சம்பந்தப்பட்ட, குடியுரிமை போன்ற சமூகப் பிரச்சினைகளில் எந்த அளவிற்கு ஈடுபட்டுள்ளது என்பது கேள்விக்குறியே என அந்த ஆய்வாளர்கள் மலேசிய நண்பனிடம் தெரிவித்தனர். இந்தியர்களின் குடியுரிமைப் பிரச்சினை குறித்து எஸ்.ஐ.டி.எஃப் இரண்டாவது கட்ட நடவடிக்கையில் இறங்குவது அவசியம் என்று மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் (யு.கே.எம்) இன ஆய்வுக்கழகத்தின் ஆய்வாளர் டத்தோ டாக்டர் டெனிசன் ஜெயசூரியா கூறுகிறார். குடியுரிமை பிரச்சினை இன்னும் தீர்வு காணப்படாத, மிகவும் சிக்கலான ஒரு விஷயமாக இருக்கின்றது. இந்தியர்களுக்கு இது ஒரு வரலாற்று பிரச்சினை என்று கூட வர்ணிக்கலாம். நிலுவையில் உள்ள பழைய சிக்கல்களுக்கு ஒரே தடவையாக முடிவு காணும் பொருட்டு சிறப்புக்குழுவை அமைத்து, அரசாங்கம் பிரத்தியேகமான வகையில் இதற்கு பரிகாரம் காண வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மலேசிய இந்தியர்கள் சம்பந்தபட்ட இந்த விவகாரத்தில் அரசாங்கம் மீண்டும் தீவிரமாக தலையிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நாம் இப்போது 2020-ஐ நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம். இந்த காலகட்டத்திற்குள் நடப்பில் உள்ள நம் சமுதாய பிரச்சினைகளை களைவதற்கு சிறப்புக்குழுவை அமைத்து செயல்பட வேண்டும் என்றும் அரசாங்கம் இதனை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். 2011-இல் மேற்கொள்ளப்பட்ட மை டஃப்தார் இயக்கத்திற்கு பிறகு அரசாங்கம் வேறெந்த இயக்கத்தையும் பெரிய அளவில் இதுவரை மேற்கொள்ளவில்லை. இதுதான் அதற்கான தருணம். ஒவ்வொரு பிரச்சினையையும் ஆறு மாதங்களுக்குள் தீர்த்து வைக்கும் வியூக முறையை அரசாங்கம் கையாளுவது அவசியமும், அவசரமும் கூட என்று டாக்டர் டெனிசன் குறிப்பிட்டார். நமக்கென்று அமைச்சர், துணை அமைச்சர்கள் இருக்கின்றனர். அரசியல் ரீதியில் சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வர இவர்களால் முடியும். அந்த செல்வாக்கு அவர்களிடத்தில் உள்ளது. ஒவ்வொரு தடவையும், அவ்வப்போது எழக்கூடிய பிரச்சினைகளுக்கு மட்டும் எவ்வளவு காலத்திற்கு நம்மால் தீர்வு காண முடியும்? மை டஃப்தார் நடவடிக்கை முதல் கட்டமாக மேற்கொள்ளப்பட்ட போது டாக்டர் டெனிசன் அதன் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது சுமார் 14,000 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன என்பதை சுட்டிக்காட்டிய அவர், அவற்றில் இன்னும் சிலவற்றுக்கு தீர்வு காணப்படாமல் இருப்பது குறித்து அதிர்ச்சி தெரிவித்தார். மலேசிய இந்தியர்களுக்கு குறிப்பாக, அரசாங்கம் சில சிறப்பு சலுகைகளை வழங்கி, இவற்றுக்குத் தீர்வு காண வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்