கோழிகளை ஏற்றிச் சென்ற லோரி கட்டுப்பாட்டை இழந்து சாலை வளைவில் தடம் புரண்டதில் இருவர் மரண முற்ற வேளையில் ஒருவர் பலத்த காயங்களுக்கு ஆளாகியுள்ளார்.இச்சம்பவம் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் பாகாவிலிருந்து கெமாயான் செல்லும் சாலையின் 38ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்துள்ளது. லோரியில் பயணம் செய்த இஸ்மாயில் பட்சிலாவும் (வயது 46) ஓட்டுநரான தன்வீர் அகமட்டும் லோரியில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.லோரியில் பயணித்த மற்றொரு நபரான முகமட் ஷாபான் (வயது 30) ஜெம்பூல் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கட்டுப்பாட்டை இழந்த லோரி சாலை வளைவில் தடம் புரண்டுள்ளது. லோரியின் முன் பகுதி மோசமாக நசுங்கியதால் இருவர் பலியாக நேரிட்டுள்ளதாக ஜெம்பூல் மாவட்ட போலீஸ் தலைவர் நோர்சைனி முகமட் நோர் தெரிவித்தார். இந்த விபத்து தொடர்பில் மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்